Category Archives: Latest Updates

மாதாந்த கலந்துரையாடல்

 

269878155_4372247416231024_4136199536115714306_n

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் எமது நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலை தொடர்ந்து பன்மை சமுதாயத்தையும் சுதந்திரத்தையும் உருவாக்குதல் தொடர்பான பயிற்சி நெறி நடைபெற்றது. இதில் வளவாளராக விரிவுரையாளர் ஜீவசுதான் அவர்கள் கலந்து கொண்டார்.

 

 

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

 

241356161_4308234929298940_6985376998052997178_n

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று SOND நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் SOND நிறைவேற்று பணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் 12 பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டோர் விபரம்.
Mrs. S.C.N. Kamarajan Asst’ District Secretary.
Mr.S. Thileepan Director Shantheekam
Mrs. T. Kothai District Child Protection Officer
Mr.R.Rajan Probation Officer Head quarters
Mr.K.Manoharan, District Child Rights Promoting Officer
Prof . Mohanthas. Former VC Jaffna University.
Mr.K.Gowthaman Career Guidance counselor, University of Jaffna.
Ms. A.Siyamini Outreach officer, District secretariat Jaffna
Dr,Rev .Fr. John Paul. Change Drug center.
Dr.Rev.Fr.Vincent Patrick Director Change Drug center
Mr.S.Senthurajah Executive Director SOND.
Ms. J.Jency Documentation officer SOND.

 

 

முன்மாதிரி பாடசாலை செயற்திட்டம் தொடர்பான விளக்கம்

 

257806467_4291782657610834_2685315086951159094_n

 இணுவில் மத்திய கல்லூரியில் அதிபர் ஆசிரியர்களுக்கான முன்மாதிரி பாடசாலை செயற்திட்டம் தொடர்பான விளக்கத்தை SOND நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் திரு.ச.செந்தூராசா அவர்கள் வழங்குகிறார். பாடசாலை ஊடாக சமூகத்தின் சாதக மாற்றம் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் தொண்டு அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றது.

 

 

கல்வி உபகரணப்பொதி கையளிப்பு

 

260966653_4282054505250316_1872133881095404340_n

தேசிய சமாதான பேரவையின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் கல்வி உபகரணப்பொதி க/பொ/த/சாதாரண தர மற்றும் க/பொ/த உயர்தர பயில்கின்ற 50 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

 

 

Training of Master Trainers

 

258591065_4257016411087459_5023767892974503089_n

தேசிய சமாதான பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட Training of Master Trainers on Prevention of hate speech யாழ் மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படுத்தி SOND நிறுவன ஊழியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர்…

 

 

சமாதான சகவாழ்வைக் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு

 

254630663_4221201724668928_1027522848474507274_n

IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தால் சமாதான சகவாழ்வைக் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு அண்மையில் “திருமறைக் கலாமன்றத்தின் கலாமுற்றத்தில் இடம்பெற்றது.” இந் நிகழ்வில் யாழ்மாவட்ட சர்வமதக் குழுவினர், இளையோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியிருந்ததனையும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதையும் படங்களில் காணலாம்.

 

 

இளையோருக்கான 8 நாள் தொழில் வழிகாட்டல் பயிற்சி

 

247396633_4194051097383991_2656793143464505874_n

அண்மையில் #SOND நிறுவனத்தால் இளையோருக்கான 8 நாள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நடைபெற்றதை படங்களில் காணலாம்…..

 

 

பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான செயற்பாடு

 

248678431_4194026204053147_7053763670882090987_n

IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான செயற்பாடு அண்மையில் தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றதைப் படங்களில் காணலாம்.

 

 

பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகள் தொடர்பான பயிற்சி

 

249388736_4193740290748405_2116362728760750800_n

அண்மையில் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகள் தொடர்பான பயிற்சிகளாக சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவகர் உத்தியோகத்தரின் தலைமை அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பயிற்சிகள் வழங்கப்பட்டதை படத்தில் காணலம்…

 

 

பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான RDB, மக்கள் வங்கியின் சேவைகள் தொடர்பான பயிற்சி

 

245763546_4193674174088350_5381625211384617728_n

அண்மையில் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான RDB, மக்கள் வங்கியின் சேவைகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டதை படத்தில் காணலம்…..