16.06.2025 அன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் SOND நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் IFF புதிய செயற்திட்ட அறிமுக கூட்டம் சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச செயலாளர் திருமதி S.உஷா தலைமையில் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது, SOND நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களால், திட்டத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றங்கள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இதில் பங்கேற்கும் துறைகளின் பங்கு, பொறுப்புகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டம், சமூக ஒற்றுமை, வன்முறையற்ற உறவுகள் மற்றும் பல்துறை ஒத்துழைப்பின் மூலம் நிலையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
16.06.2025, SOND ආයතනය මඟින් ක්රියාත්මක කරන IFF නව ව්යාපෘතියේ හැඳින්වුම් රැස්වීම චාවකච්චේරි ප්රාදේශීය ලේකම් කාර්යාලයීය ශ්රවණාගාරයේදී ප්රාදේශීය ලේකම් මිය උෂා මහත්මියගේ ප්රමුඛත්වයෙන් පැවැත්වුණි.
මෙම අවස්ථාවට විවිධ දෙපාර්තමේන්තු නිලධාරීන්, පොලිස් නිලධාරීන්, සහ සමාජ සංවිධාන වල නියෝජිතයින් ඇතුළු වැදගත් අමුත්තන් බෙහෙවින් සහභාගී වූහ.
මෙම අවස්ථාවේදී, SOND ආයතනයේ විධායක අධ්යක්ෂ ශ්රී සෙන්තුරාජා මහතා විසින් ව්යාපෘතියේ ප්රධාන ක්රියාකාරකම් සහ බලාපොරොත්තු විය හැකි සමාජික වෙනස්කම් පිළිබඳ විස්තරාත්මකව පැහැදිලි කළාය. තවද, මෙම ව්යාපෘතියට සම්බන්ධ වන ආයතන වල භූමිකාවන්, වගකීම් සහ සම්බන්ධීකරණ කටයුතු පිළිබඳවද පැහැදිලි කළාය.
මෙම ව්යාපෘතියේ අරමුණ වන්නේ සමාජ එකමුතුව, අහින්සක සබඳතා සහ බහුඅංශ සහයෝගිතාව මඟින් දිරිය සහිත සමාජික වෙනසක් ඇති කිරීමයි.