About Us

Social Organization Networking for Development

SOND
 INTRODUCTION

SOND is an Organisation, working for the betterment of the People, NGOs and CBOs of the North & East of SRI LANKA organized by a team of social workers who have nearly 30 years of experience in the development field.

Due to the war and Tsunami and  flood in 2011 , many of the people are badly affected and also the NGOs and CBOs especially in the NORTH and EAST are facing many difficulties. Our Organization is trying to help and build their capacity to provide better services to the affected people. SOND maintains a strong relation with the active NGOs and other actors in the area that we work.

Legal Status: SOND is registered as a Company  limited by guarantee.

Reg No- GA 2227    – Reg Date- 23 .01.2009.

SOND is also registered an NGO in the NGO Secretariat also.

Vision:-

Creating a better Society. [Creating a Society  for the  people live with peace , dignity .and development.

Mission:-

Supporting and Organizing different people Organizations and groups to strengthen the civil Society and people to make them to function as a model to follow in order to create a Better Society.

Values:

We are an Organization practicing  Transparency, Accountability, Good governance and Gandhian Principles. We believe in Non violent, Peace and Coexistence.

AREA OF OPERATION:    Ampara,

Batticaloa,

Jaffna

Mannar Districts.

We have our office in the above districts to help the Community and the Organizations to promote their activities.

ORGANIZATION STRUCTURE.

The Executive Director is coordinating all the above office. The office is functioning under a Coordinator  in all the district with the needed equipments, vehicles and other facilities. We also have a library and a resource centre in all the office.

Staff:

We have 22 staff and 8 volunteers working in the above four districts.

Our Programs:

Community Development.

Human rights, Democracy , & Good Governance.

Peace and Reconciliation.

Women Development.

Children Development.

Youth Development

Elders Development.

Environment protection and Development.

Climate change.

Livelihood support.

CURRENT FUNDING AGENCIES:

  • DIAKONIA: Supporting our management and capacity Building program..
  • SHIVA Charity: Pre- School Development.
  • USAID: Youth Development Training program.
  • US Embassy: Youth future guidance program.
  • UNICEF: MRE program.
  • Asia Foundation: Good Governance Program.
  • SIDA funds: Language project.
  • SDC: Agriculture Development

Trainings:

Our Training unit has conducted  trainings for many INGOs and UN agencies.

Network Members:

We have 86  NGOs and  96 CBOs in our network. They are receiving information, training and guidance from us to improve their functions in the above four districts.

Let us Join hands to extend our support for the needy on a Humanitarian basis.

We can also change the World.

Contact Person:

Mr.S.Senthurajah  Executive Director

345/9A Temple Road, Nallur, Jaffna.

Telephone:    021-2226700                Mobile: 077-3314262.

E-mail: senthu@eureka.lk

Office Address:

Ampara District:

R.K.M. Road Akkaraipattu-08        Ph-067 2277475      E mail: sondak@eureka.lk

Batticaloa District:

Saravana ( Beach ) Road , Kalladay, Batticaloa.

Ph- 065 222 6948    E mail:

Jaffna District:

60 Arasady Road, Jaffna. Ph 021 222 6700   E mail: sondjaffna@gmail.com

Web: SOND.lk

Face Book: sond

Present programs:

We are working in the  above four districts in

Climate change

We are introducing less fuel consumption cook stove, giving awareness on water management , environment protection, Organic farming, Home garden, Herbal cultivation. Bio Diversity , intensive cultivation, Giliciridia cultivation.

Agriculture Development:

We are promoting Organic farming , specially we are in the process of obtaining Organic certificate for the Banana cultivators in Kopay in Jaffna district. Large scale organic integrated farming in Jaffna

 

Youth Empowerment :

We are organising youth clubs and trained them in personality development and computer skills and English language communication skills to find them better job. Finding the potential candidates and giving them sustainable livelihood solution with the Organic farming.

Marketing Network:

We are in the process of creating a market network for the local producers. This will help them to market their product for better price and find a good market.

Language Project:

We are also working with Tamils , Muslims, and Sinhalese communities on Language rights and peace and co existence in Ampara , Jaffna , Kilinochi and Mullaitivu districts.

CBO capacity Building:

We are working with  more than 100 CBOs in building the capacity of the CBOs to make them function effectively to deliver better services to the community.

 

Community Awareness:

We have a resource centre with books , CDs and other report , materials in all the districts where we are working. The NGO, CBO leaders, Children, Youth, Government officials use the resource centre to improve their knowledge. This is a service supported by well-wishers and free of charge. We are also conducting basic English classes and Computer classes for youth and children.

 

 

சமூக அபிவிருத்தியில் தடம்பதிக்கும் சொண்ட் நிறுவனம்

1998 ஆம் ஆண்டு சொண்ட் நிறுவனமானது அம்பாறை மாவட்டத்தில் அக்கரைபற்று பிரதேசத்தில் திரு.சண்முகம் செந்துராசா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது ஏற்கனவே பல நிறுவனங்களை ஆரம்பித்து செயற்படுத்தி அதனை பல்வேறு பொறுப்பாளர்கள் கைகளிலேயே ஒப்படைத்து அவற்றை சிறப்பாக செயற்படுத்திய பின்னர் வடகிழக்கு மாகணங்களுக்கென்று பல மாவட்டங்களில் செயற்படதக்க நிறுவனமாக அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு என்ற சொண்ட் அமைப்பை ஆரம்பித்தார்.

புதிய சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு அடிப்படையில் சமூகத்தில் உள்ள சகல தரப்பினர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவி வழிகாட்டி சமூக மாற்றத்தின் வேலைதிட்டங்களிலே வலுவூட்டி பங்காளியாக்கி சமூக மாற்ற செயற்பாடுகளை சமூக அமைப்புகள் அனைத்தையும் பங்கு கொள்ளவைக்கின்ற செயற்திட்டத்தோடு இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு வழிகாட்டும் நோக்குடன் இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது .வடகிழக்கில் மக்கள் யுத்த பாதிப்புக்களினால் சொல்ல முடியாத துயரங்களை அடைந்துள்ளதைக் கண்ணுற்ற திரு. செந்துராசா அவர்கள் இந் நிறுவனத்தை ஆரம்பிப்பதனூடாகப் பல்வேறு நிறுவனங்களுக்கு முன்னுதரணமாக செயற்பட்டதோடு பல்வேறு நாட்டு நிதி உதவிகளையும் பெற்று இந் நிறுவனத்தை சிறப்பாக செயற்படுத்தினார் .

சர்வதேச அமைப்புக்கள் பல இந் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்தார்கள். நிறுவனங்களின் நிதி உதவிகளை பெறுவதற்கு முன்னராகவே எம்மக்களுக்கு செய்யவேண்டிய செயற்திட்டங்கள் பலவற்றை வடிவமைத்துத் தொண்டு அடிப்படையிலேயே பல நூற்றுக்கணக்கான தொண்டர்களை இணைத்து கொண்டு பல் வகைச் செயற்பாடுகளைச் செய்தார்கள்.

இந்நிறுவனத்திற்கான ஆளுணர் சபை ஒன்று உள்ளது. இச்சபை 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இச்சபையில் கல்விமான்கள், திணைக்கள அதிகாரிகள, சமூக சேவை நிறுவனங்களின் அனுபவஸ்தர்கள் பலர் இணைந்து செயற்படுகின்றனர். இவ் ஆளுணர் சபையின் தலைவராக இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு. சண்முகம் செந்துராசா அவர்கள் செயற்பட்டுவருகின்றார்கள். இது சமூக சேவை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
விஷேட அறிவூட்டல் செயற்திட்டம் .சமூக விழிப்புணர்வூட்டல் . சமூக அணிதிரட்டல் . சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல். அவர்களுக்கு வழிகாட்டுதல். விஷேட வகுப்புக்களை நடத்தி பின்னடைவிலுள்ள மாணவர்களை ஊக்குவித்தல். சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்திட்டங்கள் தொண்டு அடிப்படையிலேயே செயற்படுத்தப்பட்டது இவற்றை கண்ணுற்ற சர்வதேச ஸ்தாபானங்கள் பல முன்வந்து நிதிஉதவி அளித்தாகர்ள்.

குறிப்பாக சுவிஸ் நாட்டு கிறிஸ்தவ நிறுவமான டயக்கோனியா இவர்களுக்கு நிதி அளித்தது அதனை தொடர்ந்து கிறிஸ்ரியன் எயிட் எனப்படுகின்ற லண்டனை மையமாக கொண்ட அமைப்பானது நிதி உதவி அளிக்க முன் வந்தது. இவ்வாறு சுமார் 14 சர்வதேச நிறுவனங்கள் இவர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார்கள் கெயர் சர்வதேசம், புலம் பெயர்ந்துள்ளோர்களுக்கான ஜக்கிய நாடுகள். உதவி அமைப்பு, சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிதியம் , ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பு , கனடிய சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் , யப்பான் அபிவிருத்திக்கான நிறுவனம் ஐரோப்பிய யூனியன் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு செயற்திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து இவர்களுடைய செயற்பாடுகளை ஊக்குவித்தார்கள்.

ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது பின்னர் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது ஆயினும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே இது செயற்பட்டு வருகின்றது 24 பணியாளர்களையும் 14 தொண்டர்களையும் கொண்ட இந் நிறுவனமானது இம் மூன்று மாவட்டங்களிலும் தன்னுடைய செயற்பாடுகளை செயற்படுத்தி வருகின்றது.

சிறுவர் மேம்பாடு முதியோர் மேம்பாடு இளையோர் மேம்பாடு மகளிர் மேம்பாடு ஆகிய துறைகளிலும் சமூக அபிவிருத்தி துறைகளிலும் சூழல்பாதுகாப்பு அனர்ந்த முகாமைத்துவம் காலநிலை மாற்றம் ஆகிய செயற்பாடுகளில் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது குறிப்பாக பசுமை உலகை உருவாக்கவேண்டும் என்ற தொணிப்பொருளில் குறிப்பாக இயற்கை விவசாய மூலம் நஞ்சற்ற மரக்கறி உற்பத்தி செய்வதற்கான மூன்று பண்ணைகளை இந் நிறுவனம் அமைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நீர்வேலியிலும் பருத்தித்துறையில் பல்லப்பை என்ற இடத்திலும் கிழக்கு மகாணத்தில் திருக்கோயில் பிரதேசசெயலக பிரிவில் தங்கவேலயுதப்புரத்திலும் இப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன இப் பண்ணைகள் யாவற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகின்றது இரசாயனங்கள் அற்ற விவசாயத்தை ஊக்குவித்து நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் செயற்திட்டமாக இப் பண்ணைகள் உருவாக்கப்பட்டது.

இப் பண்ணைகளில் நீர் இறைப்பதற்க்கு சூரியசக்தி மின்கலங்களையும் மற்றும் நீர்முகாமைத்துவம் குறைந்தளவு நீர் பயன்பாடு இயற்கை பசளைகள் உற்பத்தி செய்தல் புதிய இனங்களை அறிமுகம் செய்தல் புதியமுறைகளில் பயிச்செய்கையில் ஈடுபடுதல் ஊடுபயிர்ச்செய்கை போன்ற பல்வேறு நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அப்பண்ணைகள் முன்மாதிரிப்பண்ணைகளாக இருக்கின்றது. இப் பண்ணைகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுப்பிரிவினர் திணைக்கள உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு தமது ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.

சூழல் பாதுகாப்புக்கென்று பல்லாயிரம் மரகன்றுகள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந் நிறுவனம் நாட்டி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து தொண்டர்களை கொண்டு மரச்செடிகளை உருவாக்கி இலவசமாக பல்வேறு கிராமங்களிலும் இவர்கள் மரங்களை நாட்டு வித்திருக்கிறார்கள். மட்டக்களப்பு மாநகரில் அழகுபடுத்தும் நோக்குடனும் சமூகத்திற்கு மரம் நடுகையின் அவசியத்தை விழிப்புணர்வு ஊட்டும் நோக்குடனும் வீதியின் நடுப்பகுதியில் மரங்களை நாட்டி மரங்களின் பயன்பாடு பற்ற பற்றிய சுலோக அட்டை தாங்கி வண்ணம் அம்மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இது போன்று பல்வேறு கிராமங்களிலே பொது இடங்களிலேயே அரச அலுவலகங்களிலேயே விளையாட்டு மைதானங்களிலேயே பாடசாலைகளிலேயே இவர்களுடைய மரம் நடுகைத்திட்டம் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.

அண்மை காலத்தில் பயன்தரும் மரங்களை நாட்டுவதிலேயே இவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். உணவு பற்றாக்குறை ஏற்படும் காலகட்டம் நெருங்கி வருவதை உணர்ந்து நாட்டப்படுகின்ற மரங்கள் உணவுப்பயனைத் தருகின்ற மரங்களாக நாட்டப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது .

பாடசாலைகள் பொது நிறுவனங்கள் என்பனவற்றுக்கு பல்வேறு திட்டங்களுக்கு ஊடாக மரக்கன்றுகளை விநியோகம் செய்து இருக்கின்றார்கள் பல்வேறு கிராமங்களிலேயே இயற்கை விவசாய முறையிலேயே வீட்டு தோட்டங்களை உருவாக்கி வீட்டு கழிவுகளை அவற்றுக்கு பசளைகளாக இட்டு அப் பசளைகளைப் பயன்படுத்தி நஞ்சற்ற உணவு உற்பத்தி முறையை அறிமுகம் செய்து வெற்றியும் கண்டு இருக்கின்றார்கள்.

யாழ் மாவட்டத்திலேயே அன்னாசி செய்கை மஞ்சள் போன்றவற்றை அறிமுகம் செய்து இச் செய்கையை மக்களுக்கு ஊக்கிவித்து இருக்கின்றார்கள்.

முதல் தடவையாக யாழ்ப்பாணத்து வாழைச் செய்கையாளார்கள் 80 பேர்களுக்கு சேதன சான்றிதழ் சர்வதேச நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்றுக்கொடுக்கின்ற முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள். மிக விரைவில் இச் சான்றிதழ் இவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. யாழ்ப்பாண வரலாற்றிலே எமது உற்பத்திகள் சர்வதேச சந்தைகளிலே விற்கப்படவேண்டும் என்ற நோக்குடனும் நஞ்சற்ற உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கிலும் இதனைச் செயற்படுத்தி உள்ளனர்.
பல விவசாயிகளை இந்தியாவின் சிறப்பான பயிர்ச்செய்கை திட்டங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளையும் வழங்கி இருக்கின்றார்கள். இந் நிறுவனத்தின் பல பணியாளார்கள் வெளிநாடுகளில் சென்று காலநிலை மாற்றம் . சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்று வந்திருக்கின்றார்கள். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவர்களின் செயற்பாட்டின் விளைவாக சமூகத்திற்;கு விழிப்புணர்வு அதிகரித்து இருக்கின்றது.
பல்வேறு சஞ்சிகைகள் கட்டுரைகள் என்பவற்றை எழுதியும் வெளியிட்டும் வந்திருக்கின்றார்கள் இவர்களின் மாதாந்த செய்திமடல்கள் ஆனது ஈ மெயில் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு அனுப்பட்டு வருகின்றது. இதன்மூலமாக இதன் செயற்பாடுகளை பலரும் அறிய வாய்ப்பு இருக்கின்றது.

www.sond.lk என்ற இணையத்தளம் ஊடாக இவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ளலாம் அதை போன்று Sond.lk என்ற முகபுத்தகம் மூலம் இவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

மூலிகை வளர்ப்பு இயற்கை உணவு உற்பத்தி இயற்கையோடு இணைந்து வாழுதல் போன்ற துறைகளில் மக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வுகளையும் ஊட்டியும் அவற்று தேவையான வழிகாட்டலையும் இந் நிறுவனம் செய்து வருகின்றது

சமூக விழிப்புணர்வுக்கான பல்வேறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் இந் நிறுவனததால் நடாத்தப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் மாதாந்த கருத்தரங்குகள் மூலமாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்வேறு திணைக்களத் தலைவர்கள் மற்றும் கல்விமான்களையும் அழைத்து மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான தலைப்புக்களிலேயே கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு மக்களுக்கான தகவல்களை கருத்துக்கள் வெளியிடப்ப்டடு வருகின்றது.
இத்தகைய செயற்பாடுகள் யாவும் பத்திரிகை வாயிலாகவும் இணையத்தள வாயிலாகவும் வீடியோ வாயிலாகவும் இலவசமாக இவர்கள் வெளியிட்டு வருவதோடு இவர்கள் அலுவலகத்திலும் இதை பெற்றுக் கொள்ளலாம்.

சமூகத்திற்க்கு அறிவூட்டும் நோக்குடன் சகல மாவட்ட அலுவலகங்களிலும் இவர்களினால் நடத்தப்படுகின்ற கனணி கல்வியும் இணையத்தள அறிமுகமும் இளையோர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இங்குள்ள நூலகம்  இணையத்தள வசதிகள் என்பவற்றை பயன்படுத்தி அறிவுத் தேடல்களில் பலர் ஈடுபடுகின்றார்கள் இதன் மூலம் இளையோரின் அறிவு வளர்ச்சிக்கும் வித்திடப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இளையோரை சமூகத்தின் பொறுப்புள்ள பிரஜைகளாக ஆக்குவதற்காக பலநூற்றுக்கணக்கானோர்க்கு அனைத்து மாவட்டங்களிலும் பயற்சி அளித்து இளையோர்களை நெறிப்படுத்துகின்ற பணியை இவர்கள் செய்துவருகின்றார்கள். இவ் அமைப்பிலே இருக்கின்ற பயிற்சி அளிக்கும் குழுவினர் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கும் சமூகத்தலைவர்களுக்கும் வடகிழக்கு மாவட்டங்கள் முழுவதிலும் பயிற்சியளித்து வருகிறார்கள்.
தற்போதும் பல கிராமிய அமைப்புக்களை வலுவூட்டுவதும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுத்தலும் போன்ற கருப்பொருட்களில் பயிற்சிகளை நடாத்திவருகின்றார்கள்.

வடக்குமாகாண சபையின் பல்வேறு அமைச்சுக்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமூகத்திற்கு தேவையான பல வெளியீடுகளை இவர்கள் செய்திருக்கின்றார்கள். சர்வதேச நிறுவனங்களினுடைய உதவியோடு இவர்களால் வெளியிடப்பட்ட பல நூல்கள் இன்று அரசாங்க அலுவலகங்களிலும் நூலகங்களிலும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. மக்களின் அறிவூட்டலிலே அதிக கவனம் செலுத்திவரும் இந்நிறுவனம் மக்கள் அறிவுப்பெருக்கத்தினூடாகவே சிறந்த ஒரு சமூகம் கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையோடு செயற்பட்டுவருகிறது.

இந் நிறுவனமானது சுயசார்புத்தன்மை உள்ளதாக ,சுதேசிய உணர்வுமிக்கதாக , நாட்டுப்பற்றுள்ள பிரஜைகளை உருவாக்கி ,உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலே பல்வகை செயற்திட்டங்கள் இவர்களால் செயற்ப்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் விற்பனையை அதிகரிக்கவுமான செயற்திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டுவருகின்றது. அதே போன்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கான கலந்துரையாடல்களும் நடைபெற்றுவருகின்றது.
வடபகுதியின் கூட்டுறவை புணரமைக்க வேண்டும் என்ற கருப்பொருளில் பல்வேறு கலந்துரையாடல்களும் இந்நிறுவனத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டிருக்கிறது. இவை சம்பந்தப்பட்ட கருத்துக்கள், சிபார்சுகள் என்பன மாகாண அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பல்வேறு சங்கங்கள் , அமைப்புக்களை வலுவூட்டுவதற்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் பல்வேறு அறிஞர் குழாம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அக்குழுவினருடைய ஆலோசனைகள் வழிகாட்டுதல்களின் பிரகாரம் பல்வேறு சமூக அமைப்புக்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுவருகின்றது.
படித்து வேலையற்று இருக்கும் தொண்டர்களை ஊக்குவிக்கவும் , அவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குமுகமாகவும் அவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றது. தொழில் வழிகாட்டலில் ஏழை இளைஞர், யுவதிகளுடைய எதிர்காலத்திற்கான செயற்த்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு தற்போது செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் ,கருத்தரங்குகள் என்பன நடாத்தப்படுகின்றது .

சிறந்த பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனமானது தனது பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அளித்துவருகின்றது. இதன்மூலமாக பணியாளர்களினுடைய திறனை மேம்படுத்தி அவர்களால் சமூகத்திற்கு நல்ல வழிகாட்ட முடியும் என்றும் இந்த அமைப்பு நம்புகின்றது.
இலங்கை போன்ற பல்லினங்கள் வாழுகின்ற நிலையில் அவர்கள் அனைவரையும் இணைத்து பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்துவதன் ஊடாக சமாதான சக வாழ்வை ஏற்படுத்த முடியும் என்று கருதி பல்வேறு மக்கள் குழுக்களுடனும் இனக்குழுக்களுடனும் இந்நிறுவனம் செயற்பாடுகளை செய்துவருகின்றது.

சூழல் பாதுகாப்புக்கு மரம் வளர்த்தல், நீர் முகாமைத்துவம் , நீர்சேகரிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயற்ப்படுத்திவரும் இவ் அமைப்பானது அண்மையில் எரிபொருளை குறைத்து பாவிக்கக்கூடிய அனகி அடுப்புக்களை கிழக்கு மாகாணத்தில் விநியோகம் செய்தது. இதனூடாக மரங்கள் அதிகளவு தறிக்கப்படாமலும் ,எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் வழிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்விமான்கள் ,வர்த்தக சமூகம் போன்ற அமைப்புக்களை அழைத்து அண்மையில் கலந்துரையாடலொன்றும் சொண்ட் அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இதனடிப்படையில் பல்வேறு பொருளாதார முயற்சிகளுக்கான அடித்தளம் இடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச நிறுவனங்களையும் அரச திணைக்களங்களையும் இணைத்து சுமார் 30 பிரதிநிதிகளைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட காலநிலைமாற்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு மாதாந்தம் இதனுடைய கலந்துரையாடல் ,கூட்டங்கள், கருத்தரங்கு என்பன மட்டக்களப்பு சொண்ட் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனூடாக பல்வேறு திணைக்களங்கள் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் எடுத்த நடவடிக்கைகளையும் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளையும் இங்கு கலந்துரையாடி பல புதிய முயற்சிகளை செய்வதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுவருகின்றது. மிக விரைவில் கிழக்கு பல்கலைக்களத்திலும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு இனங்களைக் கொண்ட சிறுவர்களை ஒருங்கிணைத்து சிறுவர் கழகங்கள் அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு சொண்ட் நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு வருகிறது. இந் நிறுவனங்கள் இச் சிறுவர் அமைப்புக்கூடாக சமாதானத்தைக் கட்டி எழுப்புதல் சிறுவர் செயற்திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை செயற்படுத்துகின்றனர். சிறுவர்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கான ஒழுங்குகள் இச் செயற்பாட்டின் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது.
சமூக அறிவூட்டல் செயற்திட்டத்தின் கீழ் இந் நிறுவனமானது நடமாடும் நூலகசேவை ஒன்றை நடத்தி வருகின்றது. இதன் மூலம் பாடசாலைகள், அரச திணைக்களங்கள் என்பனவற்றுக்கும் சமூக அமைப்புக்களுக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் நூல்களை எடுத்துச் சென்று மாதாந்தம் விநியோகித்து வருகிறார்கள் இதன் மூலம் நூல்களை வாசிக்கின்ற பழக்கத்தை அதிகரிப்பதோடு அறிவை பெருக்குவதற்கான முயற்சிகளும் மெற்கொள்ளப்பட்டுவருகிறது.

இயற்கை விவசாயம் தொடர்பான இரண்டு செயலமர்வுகளை யாழ்ப்பாணத்திலும் அம்பாறையிலும் இந் நிறுவனம் நடத்தியுள்ளது. இச் செயலமர்வை இங்கிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் றிச்சட் அவர்கள் இங்குள்ள முன்னணி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு நடாத்தி வைத்தார். இவர் தற்போது உலகெங்கும் இருக்கின்ற சேதன விவசாயத்தை ஊக்குவிக்கின்ற ஒரு முன்னணிப் பேராசிரியராகக் கருதப்படுகின்றார்.

சொண்ட் நிறுவனமானது பல சஞ்சிகைகள், கையேடுகள், ஆவணங்கள், நூல்கள் என்பவற்றை வெளியிடுவதோடு பலவீடியோ ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது.

சூழல் சமூக அபிவிருத்தி, சிறுவர் செயற்றிட்டம், இளையோர் செயற்றிட்டம் தொடர்பாக எண்பதிற்கு மேற்பட்ட வீடியோ ஆவணங்கள் யூ ரியூப் இணையத்தளத்தில் தமிழில் வெளியிடப்பட்படிருக்கிறது. இவை போன்று நடத்தப்படுகின்ற மாதாந்த கருத்தரங்குகள், பொருளாதார நிகழ்ச்சிகள் என்பன ஆவணப்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் அவை போடப்பட்டுள்ளது.

SOND நிறுவனமானது மிதிவெடி அபாயக்கல்விச் செயற்றிட்டத்தை மிதிவெடி அபாயமுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கான நிதியுதவியை யூனிசெப் நிறுவனம் வழங்கிவருகிறது. மிதிவெடியினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை சமூகத்திற்கு எடுத்துணர்த்தி அவ் ஆபத்துக்களிலிருந்து சமூக மக்கள் விழிப்புணர்வோடு செயற்படவேண்டுமென்ற நோக்கத்திலே இச்செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

வாழ்வாதாரச் செயற்றிட்டம்

வாழ்வாதாரச் செயற்றிட்டமானது பாரிய அளவில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அவர்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார திட்டங்கள் பல அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயம், கைத்தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளுக்கான நிதியுதவி பல்லாயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் பலர் தத்தமது நாளாந்த சீவியத்தை நடத்தக்கூடிய நிலையில் உயர்ந்திருக்கிறார்கள்.

கலைகலாச்சார மேம்பாடு

எமது தமிழ்ப் பாரம்பரியத்தினையும் கலைகளையும் வளர்க்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு கலைவிழாக்களையும் கலைநிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்து அவற்றிற்கு ஊக்கம் உதவி அளித்தும் நிறுவனம் செயற்பட்டுவருகிறது.

சிறுவர் கலைவிழா, இளையோர் கலைவிழா, நவராத்திரி விழா, வருடாந்த ஒன்றுகூடல் போன்ற விழாக்களின் மூலமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு இடமளித்து கலைஞர்களை ஊக்குவிக்கவும் கலைகலாச்சார மேம்பாடை ஏற்படுத்தவும் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது.

பல்வேறு கலைஞர்களை ஊக்குவிக்கவும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் 25 நாள் நாவலர் மணிமண்டபத்தில் நடைபெறுகின்ற அறநெறி பாடசாலைகளின் சுமார் 400 கலை நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து இறுவெட்டுக்களை இலவசமாக நிறுவனம் வழங்கி வருகிறது.

அத்தோடு நிதி குறைந்த சிறிய நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது கலைவிழாக்கள், வருடாந்த ஒன்றுகூடல்கள் போன்றவற்றை ஒளிப்பதிவு செய்து அவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இச்செயற்றிட்டத்தின் மூலமாக பல சமூக அமைப்புகளின் கலைகலாச்சார நிகழ்வுகளும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள்

சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டுதல் மூலமாகவும் சமூகத்திடமிருந்து பணத்திற்குப் பதிலாக நேரத்தைப் பெறுவதன் ஊடாகவும் பல செயற்றிட்டங்களை உருவாக்கலாம். கல்விமான்கள், சிறப்புத் தேர்ச்சியுடையோர், மற்றவர்களுக்கு எவ்வகையிலாவது உதவக்கூடியவர்களுடைய நேரத்தை கேட்டுப்பெறுவதனூடாக அவர்களை ஈடுபடுத்தி பல்வேறு செயற்றிட்டங்களை உருவாக்கி தொண்டு அடிப்படையில் ஒரு சமூக இயக்கத்தை உருவாக்கும் நோக்கத்தை நிறுவனம் கொண்டுள்ளது.
ஒரு ஆசிரியரிடம் ஒரு மணி நேரத்தைப் பெற்று கற்பிக்கக் கூடிய ஒரு பாடத்தை வாரம் ஒருதடவை ஒரு மணி நேரத்தில் விசேடவகுப்புக்களாக மாணவர்களுக்கு நடத்தலாம். கல்வியில் பின்னடைவுள்ள மாணவர்களுக்கு இத்தகைய வகுப்புக்கள் மிகவும் பயன் தரும்.
அதுபோல வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கு மரக்கன்றுகளை நாட்டுவதற்கு ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு தொண்டர் ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ அல்லது நாளாந்தமோ வழங்குவாராயின் அவருடைய நேரத்தைப் பயன்படுத்தி எத்தனையோ மரக்கன்றுகளை உருவாக்கலாம். சூழல் குப்பைகளை அகற்றலாம். சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபடலாம். சமூகத்திற்கு நல்ல அறிவுரைகளைப் போதிக்கலாம். இளையோர்களுக்குத் தொழில் வழிகாட்டல்கள் செய்யலாம். இவ்வாறு எண்ணற்ற செயற்றிட்டங்களை எங்கள் நேரத்தைப் பயன்படுத்தி எவ்வித கட்டணமுமின்றி எவ்வித செலவுகளுமின்றி நிறுவனமானது செயற்படுத்துவதற்கு உத்தேசித்திருக்கிறது.

அதேபோன்று வீட்டுக்கு வீடு பசுமைச் சூழலை உருவாக்குகின்ற முயற்சியில் ஒவ்வொரு குடும்பத்தவரையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய மரக்கன்றுகள், தானியங்கள், விதைகள் என்பவற்றை சமூகத்திடமிருந்து பெற்றுக்கொடுத்து பசுமைச் சூழலை உருவாக்கும் செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சூழலைப் பாதுகாத்தல் செயற்றிட்டம்

இத்திட்டத்தின் அடிப்படையில் நீரைச்சிக்கனமாகப் பயன்படுத்துதல், மின்சாரத்தை சிக்கனம் பேணுதல், எரிபொருள் சிக்கனம் பேணுதல், சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் போன்றவை தொடர்பாக சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டுதல் இத்தகைய செயற்பாடுகள் ஒழுங்கற்றதாக நடைபெறும் இடங்களிலே சென்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளைத் தூண்டுதல், அவர்களுக்கு இதுதொடர்பான முறைப்பாடுகளைச் செய்தல், மக்களிற்கான ஊக்குவிப்பைச் செய்தல், மக்களின் ஆதரவைப் பெறுதல் என்பவற்றினூடாக எதிர்காலத்தில் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சமூகத்திற்கு இச்செய்தியைக் கொண்டுசெல்லுகின்ற நோக்கில் பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு என்ற செயற்றிட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக விழிப்புணர்வும் சமூக பொறுப்புணர்வும் ஏற்படக்கூடியவாறு பிள்ளைகளை அறிவூட்டி விழிப்புணர்வூட்டி அவர்கள் தாம் பெற்ற அறிவை தமது பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்லுகின்ற செயற்றிட்டத்தை தற்போது இந்நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது.

இவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களினூடாக நற்செய்திகள் பரப்பப்பட்டு அவை மாணவர்கள் வாழ்விலும் அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்விலும் பாரிய சாதக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டம் செயற்படுத்தப்படுகிறுது.

இத்திட்டத்தில் கல்விமான்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், இளையோர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். சிறுஅளவிலான முன்மாதிரி மாற்றங்களை உருவாக்கி அதனூடாக சமூகத்திற்கு நம்பிக்கையூட்டி எடுத்துக்காட்டி சமூகத்தை வழிநடத்துகின்ற பாரிய செயற்றிட்டங்களை இந்நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.