Category Archives: Latest Updates
மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான ஊக்குவித்தல் செயலமர்வின் முதலாவது பயிற்சி வளவாளர் திரு தெ.சந்திரகுமாரினால் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 57 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தல்
உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வானது 05.07.2021 திங்கட்கிழமை நடைபெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகள் நல்லூர் கோப்பாய் தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவுகளிலுள்ள 70 வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் காலத்தின் தேவைகருதி சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது 30.07.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இச் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் னுச.கேதீஸ்வரன் அவர்களிடம் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களினால் கையளிக்கப்பட்டன.
கைகழுவும் சாதனங்கள் கையளிப்பு
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனம் கைகழுவும் சாதனங்களை மாகாண சுகாதாரப் பணியாளர் Dr.A.கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்ததை படத்தில் காணலாம்.
முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு
.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வானது கைதடி முதியோர் இல்லத்தில் 11.08.2021 புதன்கிழமை நடைபெற்றது. இம் முதியோர் இல்லத்தில் 204 முதியோர் தங்கியுள்ளனர். உற்றார் உறவினரைப் பிரிந்து மிகுந்த மனச்சுமையோடு வாழுகின்ற முதியோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன
IOM நிறுவன வெளியீடான மனித விற்பனை பற்றிய கையேடு கையளிப்பு