Category Archives: Latest Updates

அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சி

 

293630630_4987825638006529_8029852127331455019_n

அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சிப்பட்டறையானது தேசிய சமாதானப் பேரவையின் அனசரணையுடன் #NPC , சொண்ட் நிறுவனத்தினால் #SOND நேற்றைய தினம் #Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…..

 

 

கலந்துரையாடல்

 

288798248_4926106967511730_4191536110064916075_n

சீன பட்டதாரியான Ruiyao அவர்கள் Honkhong web சார்பாக புலம்பெயர் தொழிலாளர் ஆய்வினை மேற்கொள்ள எமது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணியாளர் திரு.ச.செந்துராசா அவர்களை அண்மையில் சந்தித்தனர்.

 

 

திட்ட மீளாய்வு கூட்டம்

 

287627297_4909888655800228_4259147766985868759_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் இன்று 22.06.2022 திட்ட மீளாய்வு கூட்டம் யாழ் வலயக்கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாகாண கல்விப்பணிப்பாளர்- வட மாகாணம் மற்றும் மாகாண, வலய, கோட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு

 

289683425_4907023222753438_3780732504691527625_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சனிக்கிழமை 18.06.2022 பொது நூலக மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் திரு.சி.ஸ்ரீசற்குணராஜா அவர்களும் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களும் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. R.குருபரன் அவர்களும் மற்றும் மேலதிக கல்விப்பணிப்பாளர் வடமாகாணம் திரு.J.குயின்ரஸ் அவர்களும் மற்றும் UNICEF நிறுவனத்தின் Child Survival and Development Officer திருமதி. S.ராதிகா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை நெறிப்படுத்தியோர் அனைவரையும் கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.

 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

288016039_4893078540814573_8499258072636364184_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 16.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

 

சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

286181574_4893072657481828_5902391777976285566_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி

 

285877980_4893064147482679_6260522162789991409_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.

 

 

வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு

 

285525444_4884281798360914_5942336397234843158_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு கடந்த சனிக்கிழமை Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…

 

 

தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

 

285288236_4880109288778165_1906090005671600119_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை 11.06.2022 அன்று திருமறைக்கலாமன்ற கலா முற்ற மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்ட தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக உதவி அரசாங்க அதிபர் திருமதி கமலராஜன் மற்றும் வட மாகாண பணிப்பாளர்- முன்பிள்ளை பருவ அபிவிருத்தி திரு.சு.சற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றிய அனைத்து தன்னார்வலர்களை கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.

 

 

கலந்துரையாடல்

 

284845053_4876275765828184_3807051182889301662_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி- யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் 09.06.2022 இன்று திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகங்களின் முக்கிய அதிகாரிகளும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி. சுரேந்திரகுமார் அவர்களும் மற்றும் சிரேஸ்ட சமூகவியலாளர் பாலகுமாரி அவர்களும் கலந்து கொண்டனர்.