Category Archives: Latest Updates
நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி
கருத்தரங்கு
சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டி
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினர் இணைந்து நடைமுறைப்படுத்தும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தின் கீழ் யாழ்மாவட்ட சர்வமத சமாதான செயற்குழுவும் சகவாழ்வுக்குழுவும் ஒருங்கிணைந்து சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டியினை நாவற்குழி கிராமத்தில் நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டதை படங்களில் காணலாம்….
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு
UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுுனத்தால் நடைமுறைப்படுத்தி வரும் மாற்றத்திற்கான பாதை திட்ட தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு 19.04.2022 அன்று SOND நிறுவனத்தில் நடைபெற்றது
முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு
சர்வதேச சமாதான செயற்குழுவின் யாழ் மாவட்ட உப குழுக்களின் உறுப்பினர்களுக்கான முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு வவுனியா ஓவிய ஹொட்டலில் நடைபெற்றது. இதன்போது SOND நிறுவனத்தின் PACT திட்டத்தின் கள இணைப்பாளர் கெளரிரூபன் அவர்களும் நாவற்குழி, நாவாந்துறை பிரதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்
கலந்துரையாடல்
பிரித்தானிய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாரீ அவர்கள் யாழ் மாவட்டத்திலுள்ள மதங்களின் பிரதிநிதிகளையும் SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா அவர்களையும் சந்தித்து யாழ்மாவட்டத்தின் நிலைமை பற்றிக் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
சாவகச்சேரி டிறிபேக் கல்லுரியினை சிறந்த ஒரு மாதிரிப் பாடசாலையாக உருவாக்குவது தொடர்பாக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா சேர் அவர்கள் பாடசாலை அதிபர், ஆசியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் 27.03.2022 ம் திகதி நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் சமூக பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சேர்த்து 31 பேர் கலந்து கொண்டனர்.
வன்முறையற்ற தொடர்பாடல் பயிற்சி
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் , சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் PACT திட்டத்தின் கீழ் நடைபெற்ற வன்முறையற்ற தொடர்பாடல் பயிற்சியில் சமூக மட்ட அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும், இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர். இப் பயிற்சி திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் நடைபெற்றதை படங்களில் காணலாம்….
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பயிற்சி
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகர சபையின் தெரிவுசெய்யப்பட்ட ஆண் பிரதிநிதிகளுக்கும், சமூகத் தலைவர்கள், இளையோர், ஆர்வலர்களுக்கும் CDRI நிறுவன உதவியுடன் #SOND நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி இம் மாதம் 3,4 ஆகிய தினங்களில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.