மட்டக்களப்பு சொண்ட் நிறுவனம் டயக்கோணியா அனுசரனையுடன் பாடசாலைகளுக்கு மரங்களை வழங்கினர்

535906_711134605673347_8453052252218957835_n
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனமானது டயக்கோணியா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து பாடசாலைகளில் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டும் மாணவர்களுக்கு இயற்கைச் சூழலின் மகத்துவத்தை உணரச் செய்யும் நோக்குடனும் 13.11.2014 ஆம் திகதி கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், சத்துருக் கொண்டான் புளியடிமுனை தமிழ் கலவன் பாடசாலை, கொக்குவில் விக்னேஸ்வரா  

123
வித்தியாலயம், பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம், கள்ளியங்காடு சாகிறா பாடசாலை, தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயம், திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலயம்ஆகிய பாடசாலைகளுக்கு அப்பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள சுற்றாடல் முன்னோடிக் கழகத்திடம் மா,தென்னை, பலா, விளா, காட்டுநெல்லி, ஆகிய பயன்தரும் மரங்களுடன்,காயா, மகோகனி.காட்டுத் தேங்காய் போன்ற நிழல் மரங்களும் அனைத்து பாடசாலைகளிலும் மூலிகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் சிலவகை மூலிகைச் செடிகளும் வழங்கப்கப்பட்டுள்ளது

10372205_711134435673364_3850611302082406893_n1509093_711134635673344_478183544765629366_n
 10354670_711134509006690_5197849418166681820_n10603207_711134655673342_349364467577694120_n