டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல்

sbt1

மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல் 27.01.2015 இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலானது அரச அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாசிக்குடா கடற்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள சில 

விடுதி உரிமையாளர்களால் முருகைக் கற் பாறைகள் அகற்றப்படுவதால் அச்சூழலுக்கு ஏற்படும் பாதக விளைவுகள், மற்றும் அக்கடற்கரை எல்லைகளுக்கு செல்ல பொது மக்களுக்கு விதிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகள் தொடர்பாகவும், இவற்றுக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் சந்தன மடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதால் சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள், அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

sbt5 sbt3
sbt2 sbt4 copy