மன்னார் மாவட்டத்தில் SOND செயற்திட்டம்.
இப்பிரதேசங்களிலுள்ள கிராமிய அமைப்புக்களின் செயற்திறனை மேம்படுத்தி அங்குள்ள சனசமூக நிலையங்களைப் புனரமைத்து பிரதேச சபைகளுக்கூடாக மக்கள் நலனோம்பும் செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், ஊக்குவிப்புகள் என்பன SOND நிறுவனத்தினாலும், மக்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு அவர்கள் தற்போது செய்கின்ற வாழ்வாதார செயற்திட்டங்களினூடாகப் பெறப்படுகின்ற வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய சந்தைவாய்ப்புக்களை உருவாக்கலை ZOA நிறுவனமும் இப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கல்வியை முடித்துக்கொண்டு வேலை இல்லா நிலையில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள், தொழில் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் போன்ற செயற்திட்டங்களை YGRO நிறுவனமும் செயற்படுத்த இருக்கிறது.
முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலும் அரசாங்க அதிகாரிகள், சமூக நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஈடுபாடுடைய குழுக்கள் ஆகியோருடன் இணைந்து பிரதேச மட்டத்தில் இச்செயற்திட்டத்தை விளக்கும் கூட்டங்கள் அந்தந்தப் பிரதேச செயலாளார்கள் தலமையில் நடைபெற்று முடிந்துள்ளது. பின்னர் அந்தந்தப் பகுதியில் இருக்கின்ற கிராமங்களுக்குச் சென்று கிராம அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக கிராமிய மட்டத்தில் இக்கிராமிய நிறுவனங்களுக்கான பயிற்சிகள் SOND நிறுவனத்தால் ஆரம்பிக்கப்படஉள்ளன.