SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்றிட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது
02.07.2015 வியாழக்கிழமை கொழும்பில் Kingsbery Hotel இல் SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்திட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இவ்வாய்வில் சுவிஸ்லாந்து நாட்டு தூதுவர் அவர்களும் அமைச்சின் செயலாளர் அவர்களும் இலங்கைக்கான SDC திட்டத்தின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் 3 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். திரு.ச.செந்தூராசா அவர்களும்
கலந்து கொண்டு இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான பல்வகையான கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக புலம்பெயர்ந்து செல்லுகின்ற தொழிலாளர்கள் தமக்கு ஏற்படுகின்ற குறைகளை முறைப்பாடு செய்யும் பொருட்டு ஒரு Online service ஐ உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இதன் மூலம் கொழும்பிலிருந்தபடியே நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகின்ற மக்களின் பிரச்சினைகளை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இரு உத்தியோகத்தர்களை நியமித்து செயற்படுத்த முடியும் என்றும் இதன் மூலம் இலகுவாக மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முடியும் என்றும் இத்தகைய செயற்றிட்டங்கள் வெளிநாடுகளில் செய்யப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இதன் போது பதிலளித்த அமைச்சின் செயலாளர் தற்போது தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யும் முறை ஒன்று இருப்பதாகவும் அது அவ்வளவு வினைத்திறனாக இல்லாவிட்டாலும் கூட இந்த புதிய முறைகளை நாம் பரிசீலித்து வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.