அம்பாறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரங்கம்
அக்கரைப்பற்று சொன்ட் நிறுவனம் ,அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் ஆகியன இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரங்கம் ஒன்றை நிறுவி அதற்கான மாதாந்த கலந்துரையாடலை நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் 07.07.2015ம் திகதி அக்கரைப்பற்று சொன்ட் அலுவலகத்தில் அம்பாறை மாவட்ட இணையத்தின் தலைவர் திரு: வ. பரமசிங்கம் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சொன்ட் அலுவலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அமுல்ப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அடுத்த கட்ட செயற்பாட்டுத் திட்டமிடல் செயன்முறையும் இடம்பெற்றது..
இக் கூட்டத்தினை மத்தியசுற்றாடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதிப்பணிப்பாளர் ஜனாப் : எம்.ஏ.சீ.நஜீப் அவர்கள் வழிநடாத்தினார் . அத்துடன் அக்கரைப்பற்று சொன்ட் அமைப்பின் பணிப்பாளர் திரு: ச.செந்தூராசா அவர்களும், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஜனாப் : ஏ.ஜே.எம்.அஸ்மி அவர்களும், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் ஜனாப்: கே.எல்.எம்.இஸ்மாயில் அவர்களும், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரி, காலநிலை மாற்றத்தினை மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளும் வகையில் உள்வாங்கப்பட்ட வளவாளர் : திரு: எஸ்.ரமேஸ்வரன் அவர்களும், அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், அரச கால்நடை வைத்திய அதிகாரி உட்பட அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களுடைய பெறுமதியான கருத்துக்களை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல்சார் பிரச்சினைகளை 07 வகையாக வகுத்து அவற்றை பொருத்தமான அரச அரசசார்பற்ற அமைப்புக்கள் எப்போது முன்னெடுப்பது யார் யார் இதற்கான ஒழுங்கமைப்பு பொறுப்பை மேற்கொள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக சொன்ட் நிறுவனத்தின் இணைப்பாளர் திரு: ரீ.விஜயகுமார் அவர்களின் நன்றி உரையுடனும், மதியபோசனத்துடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.