சர்வதேச சிக்கன சேமிப்பு தின நிகழ்வு:
முழுமையான பங்களிப்புடன் மன்னார் மாவட்ட நகரசபை மண்டபத்தில் 02.10.2015 அன்று கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்விற்கு வடமாகாணசபையின் கௌரவ அமைச்சர் திரு.பா. டெனிஸ்வரன் (மீன்பிடி, போக்குவரத்து வர்த்தகம், உள்ளுராட்சி மற்றும் வீதிஅபிவிருத்தி) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தனது அமைச்சின் செயற்பாடுகள், வளங்களைப் பாதுகாத்தல், சேமித்தல் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எனும் தலைப்பிலே உரையாற்றினார்.
சிறப்பு அதிதிகளான திரு. சிவானந்தன், சிரேஸ்ர முகாமையாளர் இலங்கை வங்கி மன்னார் அவர்கள் தங்கள் வங்கியானது மிகவும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் தங்கள் வங்கியினால் நிதியுதவிகளை சேமிப்புக் குழுக்களுக்கு வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
ZOA நிறுவனத்தின் வடமாகாண சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. ஜோர்ச் அந்தோனிப்பிள்ளை அவர்கள் ZOA நிறுவனத்தின் செயற்பாடுகள், சேமிப்புக் குழுக்களின் உருவாக்கம், அதன் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதிநிறுவனங்களின் பங்களிப்பு தொடர்பாக தனது உரையில் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்ட சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச உபதலைவர் திரு. த.மரியதாஸ் அவர்கள் உரையாற்றுகையில் ZOA அமைப்பினால் வழிநடாத்தப்பட்டு வரும் சிறுசேமிப்புக் குழுக்களானது மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருவதாகவும் அதனுடைய வளர்ச்சிக்கு தங்கள் சமாசத்தினூடாக உதவிகளை வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் “சேமிப்பு,சிக்கனம்” எனும் பதங்களானது நிதியினைச் சேமிப்பதனை மட்டும் குறிப்பிடுவன அல்ல எனவும் நீர், உணவு மற்றும் நேரம் போன்ற வளங்களைச் சேமித்தலுக்கான அவசியம் பற்றியும் அவை எவ்வாறு வீண்விரையம் செய்யப்படுகின்றது என்பது பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டுக்காட்டினார்.
இந் நிகழ்விற்கு திரு. AS. டயஸ் இலங்கை சேமிப்பு வங்கி மன்னார், திரு. சிவானந்தன் சிரேஸ்ட முகாமையாளர் இலங்கை வங்கி மன்னார்,Commercial வங்கியின் உத்தியோகஸ்தர்களான திரு. சுதேஸ் மற்றும் திரு. பிரியதர்சன், திரு. த. மரியதாஸ் உபதலைவர் மன்னார் மாவட்ட சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் மற்றும் அதன் செயலாளர் திருமதி. அ.புனிதநட்சத்திரம், திரு. அன்ரனிதாஸ் பெர்ணான்டோ திட்டமுகாமையாளர் வாழ்வோதயம், திரு. யோஸ் அமலசூரியன் விவசாயப் போதனாசிரியர் World Vision, திரு. S.J. பிரசாந்தன் டயஸ் கிளை முகாமையாளர் VisionFundLanka, திருமதி. M.R. இருதயராஜ் குருஸ் மாதர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், முசலி பிரதேச செயலகம் திரு. FA. நிக்சன் குருஸ், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகஸ்தர், ChildFund மற்றும் ZOA, SOND மற்றும் YGRO ஆகிய நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள், திட்டப் பிரதேசத்தில் உள்ள சிறுசேமிப்புக் குழுக்களின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், மாதர் சங்கங்களின் அங்கத்தவர்கள், கிராமமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்துசிறப்பித்தனர்.