பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வு- காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம்
காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் ஐந்து பாடசாலைகளை தெரிவு செய்து அவர்களிடையே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் பற்றிய தெளிவினை உணர்த்துமுகமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு பயிர் விதைகள், நிழல் மரங்கள் போன்றவற்றைக் கொடுத்தும் பசுமையை உருவாக்க வழி வகுத்ததோடு
பசுமையை உருவாக்க வழி வகுத்ததோடு மாணவர்களின் ஆர்வத்தினை மேலும் தூண்டுவதற்காக கட்டுரை, சித்திரம், பேச்சு மற்றும் பசுமை பாடசாலை, நாற்றுமேடை தெரிவு என போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய 03.12.2015 வியாழக்கிழமை நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் இறுதிக்கட்ட நிகழ்வாக மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட சுற்றாடல் அதிகாரிகள் கலந்து நாட்டப்பட்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.