ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ACTED , SOND , BASL ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடக்குகிழக்கு மாகாணங்களில் அடிப்படைஉரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கு
ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ACTED , SOND , BASL ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடக்குகிழக்கு மாகாணங்களில் அடிப்படைஉரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்குகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டரீதியான செயற்திட்ட அறிமுகம் அரசஅதிபர் தலைமையில் 04.03.2016 அன்று கச்சேரியில் கூட்டம் நடைபெற்றது.
இத்திட்டம் முதற்கட்டமாக யாழ்பாணத்தில் 04 பிரதேசசெயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
1. கோப்பாய்
2. தெல்லிப்பழை
3. நல்லூர்
4. சாவகச்சேரி
ஆகிய பிரதேசசெயலகங்களில் இத்திட்டத்தினை செயற்படுத்தவுள்ளோம்.
இதன் அடிப்படையில் கடந்த 16.03.2016 அன்று கோப்பாய் பிரதேசசெயலகத்தில் இத் திட்டத்துக்கான கூட்டம் நடைபெற்று எமது திட்டஅறிமுகம் அனைத்து கோப்பாய் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ACTED , SOND திட்ட இணைப்பாளர்களினால் நடாத்தப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம் 23.03.2016 அன்று நல்லூர் பிரதேசசெயலகத்திலும் இத்திட்டம் தொடர்பான அறிமுகக்கூட்டம் சகல உத்தியோகத்தர்கர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சாவகச்சேரி தெல்லிப்பழை ஆகிய பிரதேசசெயலகங்களிலும் இவ்அறிமுக கூட்டத்தினை நடாத்ததிட்டமிட்டுள்ளோம்.