கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டம் தொடர்பான அறிமுகக்கூட்டம்

 

1 slmp karaveddy ore

SOND அமைப்பானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கொள்கைக்கு அமைவாக சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டமொன்றை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் முதற்கட்ட அறிமுகக்கூட்டமானது கடந்த 4ம் திகதி அரசாங்க அதிபர் தலமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 15 பிரதேச செயலகர்களுடன் நடைபெற்றது.

2 slmp karaveddy ore

இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் தொழிலை மேற்கொள்வதற்கு செல்வதற்கும் அவர்களுடைய தொழில் தொடர்பான ஒப்பந்தங்களை சரியாகச் செய்வதற்கும் அவர்களுக்குரிய வேதனம் அந்நாடுகளில் இருக்கின்ற பாதுகாப்பு போன்ற விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இச்செயற்திட்டத்தை SOND நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

 கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 16 கிராமங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது இதன் மூலம் தொழிலுக்காக வெளிநாடு செல்லுகின்ற தொழிலாளர்களுடைய குடும்பத்தின் நலனை மேம்படுத்துவதுதான் இதன் பிரதான நோக்கமாகும். கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் இத்திட்டம் தொடர்பான அறிமுகக் கூட்டமானது 23.03.2016 ம் திகதி இப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்டது. இதில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் (திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பல்வேறு திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள். இத்திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் SOND நிறுவனத் தலைவர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றுவதையும், தலமை வகித்த பிரதேச செயலாளர் திரு.சிவசிறி அவர்கள் உரையாற்றுவதையும், கலந்துகொண்ட கூட்டத்தினரையும் காண்கின்றீர்கள்.

7 slmp karaveddy ore

4 slmp karaveddy ore 4