ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

 

web 1

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சொண்ட், அக்ரெட், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள், சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கானது யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அடிப்படையில் பிரதேச செயலகமட்ட கருத்தரங்கானது கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில், கோப்பாய் பிரதேச செயலகர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் சொண்ட் நிறுவனப்பணிப்பாளர் திரு.செந்துராஜா அவர்கள் அறிமுக உரையினையும், திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஞா.பிரியறஜினி வரவேற்புரையினையும் வழங்கினர்.

வளவாளார்களாக யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் திரு.கஜிதரன், சட்டத்துறை விரிவுரையாளர் திரு.ம.ஜனகம் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் இக்கருத்தரங்கில் கோப்பாய் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஊடகத்துறையினர் மற்றும் கிராமமட்டக் குழுக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் 9.30 மணிக்கு மாகாணமட்ட ஊடகவியலாளருக்கான கருத்தரங்கானது  Green grass hotel இல் நடைபெறவுள்ளது.

web 3

web 2