வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு
வடமாகாண ஊடகவியலாளருக்கான கருத்தரங்கானது 28.05.2016 சனிக்கிழமை யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஜனாதிபதியின் ஊடகத்துறை பிரதிநிதி திரு.வதீஸ் வருணன் அவர்கள்
சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.ஊடக சுதந்திரம், தகவல் அறியும் உரிமை தொடர்பான விடயங்கள் தொடர்பாக கருத்துரைகள் இடம்பெற்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இக் கருத்தரங்கினை Acted, SOND, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்தனர்.
சொண்ட் நிறுவனத் தலைவர் உரையாற்றுகையில் உலகின் தலைவிதியை மாற்றியமைக்கும் தகைமை கொண்ட ஊடகத்துறையினர் எமது மக்களின் வாழ்வை மேம்படுத்த வழி செய்யவேண்டுமென்றும், உங்கள் எழுத்துக்களால் எங்கள் மக்கள் நன்றாக வாழும் நிலை உருவாக வேண்டுமெனவும் தெரிவித்தார்.
திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் உரையாற்றுகையில் மக்களுக்கு நலன் செய்யும் செய்திகளை ஊடகத்துறை ஆராய்ந்து எழுத வேண்டுமென்று தெரிவித்தார்.
நிகழ்வில் திரு. அன்ரன் சிவக்குமார் Acted நிறுவன மாவட்ட அதிகாரி அவர்களும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதி சட்டத்தரணி பிரகலாதன் அவர்களும், SOND நிறுவனத் திட்ட உத்தியோகத்தர் திருமதி பிரியரஜனி அவர்களும் உரையாற்றினார்கள்.