ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறிசார்அறிக்கை தொடர்பான கருத்தரங்கு
ஊடகவியலாளருக்கான நெறிசார் அறிக்கை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு மட்டக்களப்பு கல்லடி பிரிச்வியு கொட்டலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் சொண்ட், சட்டத்தரணிகள் சங்கம், அக்ரெட் ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறிசார் அறிக்கை தொடர்பான கருத்தரங்கு 23.07.2016 மற்றும் 24.07.2016 ஆம் திகதிகளில் இரண்டு நாள் அமர்வு சொண்ட் நிறுவன பணிப்பாளர் திரு. ச.செந்துராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்த செயலமர்வில் ஊடகநெறிமுறைகள், ஊடகவியலாளர்களுக்கான சட்டபாதுகாப்பு, ஊடக சட்டங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. சமகாலங்களில் சமூகம் எதிர்நோக்கும் உரிமைசார் பிரச்சினைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து நியாயமான தீர்வுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இரண்டு நாள் இடம்பெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக சட்டத்தரணி திரு.விஜயகுமார், சட்டத்தரணி திருமதி.எஸ்.மிருதினி, மனித உரிமைகள் வளவாளர் திரு.கே.சிறிஸ்குமார், ஊடகவியலாளர் தேவதிரன் மற்றும் சொண்ட் நிறுவன பணிப்பாளர் ச.செந்தூராஜா, அக்ரெட் நிறுவன திட்டஉத்தியோகத்தர் திருமதி. லாவண்யாகிறிஸ்ரி, சொண்ட் நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் திரு.நெ.கிறைசன், நிதி நிருவாக உத்தியோகத்தர் செல்வி.ந.பிரவீனா, திட்ட களஉத்தியோகத்தர் திரு. தி.சிவநடராஜா, சட்டத்தரணிகள் சங்க திட்டஉத்தியோகத்தர் திருமதி. காமலீற்றா சசிரூபன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் இரண்டு நாள் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.