பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டு கால மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டுகால ஆலோசனைக் கூட்டமானது 02.09.2016ம் திகதியன்று யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா, சுவிஸ் அபிவிருத்தித் திட்ட அதிகாரி திரு.பெனில் தவராசா, பிராந்திய சுவிஸ் அபிவிருத்தி திட்ட அதிகாரிதிரு.சப்ரிநாத் நாயர், செயலக, பிரதேச செயலக பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்பத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலமையுரை இடம்பெற்றது. தொடர்ந்து சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா அவர்களின் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது கடந்த 6 மாதகாலமாக இச்செயற்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றிய சமர்ப்பணமும் அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் சுவிஸ் அபிவிருத்தித்திட்ட அதிகாரி திரு.பெனில் தவராசா, பிராந்திய சுவிஸ் அபிவிருத்தி திட்ட அதிகாரி திரு.சப்ரிநாத் நாயர் ஆகியோரால் திட்டம் தொடர்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் சபையோராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இறுதியாக திட்ட இணைப்பாளர் திருமதி.தர்சினி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டுக் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.