தையிட்டி கிழக்கு பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் அகற்றப்பட்து தொடர்பான சிறு விளக்கம்
14.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்கனவே முதல் நாள் மயிலிட்டித் துறைமுகத்தில் எம்மால் அடையாளப்படுத்திய மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கு Halo-trust நிறுவனம் வந்த வேளை தையிட்டி கிழக்கில் ‘கலாவல்லி சனசமூக நிலையத்தின்’ அருகே உள்ள ஒரு காணியின் உரிமையாளர் காணி
மற்றும் கிணறு துப்பரவின் போது தமது காணியில் உள்ள கிணற்றில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து 15.05.2017 Halo-trust நிறுவனத்தினால் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட போதிலும் அக் கிணற்றில் ஏராளமான வெடிபொருட்கள் இருப்பதனாலும் இவற்றை அப்புறப்படுத்துவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் எனவும் தெரிவித்தனர் (அதாவது Hand Grenade clip கழன்ற நிலையில் இருந்த காரணத்தால்). அங்கு வெடிபொருட்கள், 3 கிறினேற் ஒரு றெஜிபோம் கவர்களில் உள்ளவாறு மரப்பெட்டிகளில் பெருமளவில் காணப்பட்டது. அத்துடன் மேலும் வெடிபொருட்கள் அப் பெட்டியிலிருந்தும் றெஜிபோம் கவரினுள் இருந்து கழன்று கிணற்றினுள் காணப்பட்டது. அதன் காரணத்தால் அவர்களின் மீட்புப்பணி இடைநிறுத்தப்பட்து. குறிப்பிட்ட கிணறு ஆபத்தான நிலையில் இருப்பதனால். Police ற்கு அறிவித்து Army (STF) ஊடாக வெடிபொருட்களை அகற்றுமாறு கேட்டிருந்தனர். இதனால் மறுநாள் உரிமையாளரினையும் அழைத்து சென்று எமது களப் பணியாளர்களினால் கே.கே.எஸ் பொலிஸ் நிலையத்தில் Entry போடப்பட்டது.
பொலிஸ் Entry போடப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டளையினை பெற்று STF (army) அகற்றுதல் பணியினை மேற்கொள்வது வழக்கம். அதனால் சில தினங்கள் காத்திருக்க வேண்டிய தேவையும் காணப்படும் ஆனால் இம் முறை 7 நாட்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடையில் எமது களப்பணியாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நினைவூட்டியிருந்தனர்.
அதேசமயம் SOND நிறுவனத்தினால் STF மிதிவெடி அபாய மீட்புப்பணியிரிடம் உதவி கோரியமைக்கமைவாகவும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ளுவுகு படையினர் வெடிபொருட்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். எனினும் இவற்றை மீட்டு எடுப்பதற்கு அவர்களிடம் தகுந்த உபகரணங்கள் இல்லாதிருந்த போதிலும் தமது உயிரை பணயம் வைத்து பெரிய போராட்டத்தின் மத்தியில் வெடி பொருட்களை மீட்டனர். அத்துடன் எமது SOND நிறுவன MRE பணியாளர்களும் முற்றுமுழுதாக இவர்களுடன் கூடவே இருந்து அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்து பெரிதும் உறுதுணையாக இருந்தனர். மேலும் அக் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஏறக்குறைய 7 நாட்கள் தேவைப்பட்டிருந்தது. மேலும் இக்கிணற்றில் இருந்து Hand Grenade, Motor shell, Para shell, Claymore, Rifle grenade, Bullets போன்ற வெடி பொருட்கள் பெருந்தொகையாக அகற்றப்பட்டன.
ஆயினும் கிணற்றினுள் தனித்தனியாக இருந்த Hand Grenade clip கழன்ற நிலையில் அகற்ற முடியாத காரணத்தினால் 28.05.2017 ஞாயிற்றுகிழமை அன்று 21 Hand Grenade கிணற்றினுள் வைத்து வெடிக்கவைக்கப்பட்டது.
இவ் வெடிபொருட்கள் என்ன காரணத்திற்காக, யாரால் இவை கிணற்றினுள் வீசப்பட்டன என்பது புரியாத புதிராக அமைந்துள்ளது.