மாவிட்டபுரம் தெற்குப் பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு
இன்றைய தினம் 09.12.2017 தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியான மாவிட்டபுரம் தெற்குபகுதியில் (J/232) பாவனையற்ற மலசலகூட குழியினை புனரமைப்பதற்காக அகழ்கையில் அக்குழியில் சில வெடி பொருட்கள் காணப்பட்டமையால் அங்கு துப்பரவுப்பணியில் ஈடுபட்டவர்கள்
சொண்ட் நிறுவனத்திற்கு அறிவித்தல் வழங்கியதற்கமைய Halo-trust பணியாளர்கள் அப்பிரதேசத்திற்கு விரைந்து வந்து வெடிபொருட்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொழுது 90 வெடிக்காத நிலையிலுள்ள வெடி பொருட்கள் அகற்றப்பட்டன.
அத்துடன் மேலும் அங்கு வெடி பொருட்கள் காணப்படுவதால் நாளையும் வெடிபொருட்கள் அகற்றல் பணி தொடரும் என Halo-trust பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.