சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீ 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா யா/வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு. ச.சிவஸ்ரீ அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை கோட்டக்கல்வி அலுவலர் திரு ம.ஆனந்தகுமார், வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு. சோ.சுகிர்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மாவிட்டபுரம் யா/வீமன்காமம் மகா வித்தியாலய அதிபர் திரு.S.இராமநாதன் அவர்களும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் சிறுவர் உரிமை மேம்பாட்டு அலுவலர் திரு.T.கிருஸ்ணகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Column 2