சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் நிறுவனத்தினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium) அண்மையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச.சிவசிறீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யுனிசெவ் நிறுவனத்தின் வடபிராந்திய தலைமை அதிகாரி திரு.ந.சுதர்மன் அவர்கள் ஆரம்ப உரையையும் ஆய்வரங்கத்தின் நோக்கம் பற்றிய உரை சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தெல்லிப்பளை பிரதேச பொலிஸ் அதிகாரிகள், கிராமாமட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரு.சோமசுந்தரம் சுகிர்தன், வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன், தெல்லிப்பளை கோட்டக்கல்லி அலுவலகர் திரு. மாணிக்கம் ஆனந்தகுமார், இலவச சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் திருமதி. றொபின்சா நக்கீரன், தெல்லிப்பளை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெயா தேவநீதி மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதேச இணைப்பாளர் திரு.ரி.கனகராஜ் ஆகியோர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.