செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த மிதிவெடி அபாயக்கல்வி, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் சுகாதாரமும் போசாக்கும் ஆகிய செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் சிறப்பு விருந்தினராக யுனிசெவ் நிறுவனத்தின் வடபிராந்திய தலைமை அதிகாரி திரு.ந.சுதர்மன் அவர்கள்கலந்து கொண்டார். அத்துடன் முடிவடையும் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கையும் எதிர் காலத்தில் சமூகத்தின் பொறுப்புக்கள் தொடர்பான முன்மொழிவையும் எமது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் முன்வைத்தார்.
அத்துடன் இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு.சிவதாசன், மாவட்ட இணைப்பாளர் (சிறுவர் உரிமை மேம்பாட்டு அலுவல்கள்) திரு.க.மனோகரன் ஆகியோர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.
அத்துடன் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தமது கிராமங்களின் தேவைகள் தொடர்பில் உரையாற்றப்பட்டது.