ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளின் யாழ் விஜயம்
JICA a Japan Government Organization visited north to explore the possibilities of implementing a project to support the Agriculture farmers to market their products for better price.
They met SOND staff team, Farmers organization, consult with AIs , DD, PD of Agriculture department and also visited the farms and agri products collection centers.
அண்மையில் ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகர் கசுகோ சிறாய், விவசாய பொறியியலாளர் கொகி மற்சுடா, ஒருங்கிணைப்பாளர் செனரத்.டி.சொய்சா ஆகியோர் இலங்கையின் வடபகுதியான யாழ் மண்ணிற்கு விஜயம் செய்திருந்தனர்.
யப்பான் நாட்டின் உதவியுடன் இலங்கையில் விவசாய உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்துதல் தொடர்பான திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயற்படுத்துவதற்கு திட்டமிடுவதற்கான தகவல்களை திரட்டுவதற்காக வருகைதந்தனர்.
இவர்களின் வருகையின் போது SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா மற்றும் SOND பணியாளர்களுடனான கலந்துரையால் SOND நிறுவனத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாழ் மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சம்மேளத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும் விவசாய உற்கத்திகள் நடைபெறும் இடங்களான அளவெட்டி, நாவற்குளி போன்றவற்றிற்கும், கோப்பய், அளவெட்டியிலுள்ள விவசாய பொருட்களின் மொத்தக் கொள்வனவு நிலையங்களையும் பார்வையிட்டனர்.