வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் – கிளிநொச்சி மாவட்டம்

 

Kili Kach

கியிநொச்சி மாவட்ட செயலகத்தில் UNICEF நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தால் அமுலாக்கப்பட உள்ள வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட அரச அதிபர் அவர்கள் உரையாற்றினார், தொடர்ந்து SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றினார்.

யுனிசெவ் வடபிராந்திய அதிகாரியும், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரும் தொடர்ந்து இத் திட்டம் தொடர்பான விளக்கத்தினை வளங்கினார்கள்.

மேலும் பிரதேச செயலகர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.