முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

.

1 2

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வானது கைதடி முதியோர் இல்லத்தில் 11.08.2021 புதன்கிழமை நடைபெற்றது. இம் முதியோர் இல்லத்தில் 204 முதியோர் தங்கியுள்ளனர். உற்றார் உறவினரைப் பிரிந்து மிகுந்த மனச்சுமையோடு வாழுகின்ற முதியோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உதவிப்பொருட்கள்  வழங்கப்பட்டன