கருத்தரங்கு
சமகால நாட்டு நிலை தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தினை பிரதிபலித்து நாட்டில் புதியதொரு ஆட்சி மலர்வதற்கு நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சட்ட துறைகளில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்தரங்கு #SOND நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ் திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் நேற்று 19.05.2022 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை #SOND நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் மோகனதாஸ், ஊடகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.ரகுராம், சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் Ms.கோசலை மதன், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் திரு. செல்வின் ஆகியோர் சமகால நிலைமை தொடர்பான விளக்கங்களை அளித்திருந்தனர்.