பயிற்சிநெறி

 

299166333_5065246580264434_6698423925676314973_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் அரச அதிகாரிகளுக்கான செயற்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிநெறி நேற்றைய தினம் திருமறைக்கலாமன்ற கலைக் கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியானது சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக Dr.Jeevasuthan (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), Dr.Raguram (பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சியில் சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம சேவையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.