Column 1
ASI நிறுவனமானது SOND உடன் இணைந்து நடாத்தும் நீடித்து நிலைபெறும் உட்கட்டமைப்புக்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச மட்ட கலந்துரையாடல் தலைவர் SOND
நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அரசாங்க திணைக்கள ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள்,கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், கட்டிட ஒப்பந்தகாரர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமை உரையாற்றுவதையும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.மோகனதாஸ் உரையாற்றுவதையும் மற்றும் கலந்துகொண்ட பங்குபற்றுனர்களையும் படங்களில் காண்க.