டயக்கோணியா அனுசரணையில் சொண்ட் நிறுவனத்தின் அமுலாக்கத்தில்- முதலுதவிப் பயிற்சி

1  
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையில் சொண்ட் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் 2014.08.26,27 ம் திகதிகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வளவாளர் கணேஸ் அவர்களால் முதலுதவிப் பயிற்சி பட்டிப்பளை அ.த.க பாடசாலையில் நடாத்தப்பட்டது. இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எமது நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 6 கிராமத்தினைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ குழு, பட்டிப்பளை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர், 

2
அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட 24 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
பயிற்சி முடிவின் போது பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் துஸ்யந்தன், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கான முதலுதவிப் பெட்டி, அனர்த்த முகாமைத்துவ எச்சரிக்கை கருவி மெகா போண் போன்றன வழங்கப்பட்டது