பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆக்கச் செயற்பாடு தொடர்பான பயிற்சிப்பட்டறை

Untitled-1 copy
கழிவுப் பொருட்களை பயன்படுத்தி ஆக்கச் செயற்பாடு தொடர்பாக ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சிப்பட்டறை 2014.09.21 ம் திகதி அன்று தம்பட்டை சுவாட் அமைப்பின் பயிற்சி கட்டடத்தில் நடைபெற்றது.
இலண்டண் சிவாசரிற்றி அமைப்பின் நிதியூட்டலுடன் அக்கரைப்பற்று சொன்ட் அமைப்பு முன்னெடுத்த வேலைத் திட்டமானது அமைப்பின் உத்தியோகத்தர் த..விஜயகுமார் தலைமையில் ஆரம்பமானது.
Untitled-3 copy
இச்செயலமர்வில் சிவாசரிற்றியின் ஸ்தாபகர் பொப் கிளிப்பின்றன் பிரதம அதிதியாகவும் எம்.ருவன்மாலி பெனான்டோ வளவாளராகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஆற்றல் விருத்தியினை மேம்படுத்தல். கற்றல் வளர்ச்சியை ஊக்குவித்தல், கழிவுப்பொருட்கள் மூலமும் பலவகையான உற்பத்தி பொருட்களை மாணவர்கள் வடிவமைப்பதனால் அவர்களுடைய புதிய புதிய சிந்தனைகளை வெளிக்கொண்டு வருதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இச்செயலமர்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
இதனைத் தொடர்ந்து 2014.09.22 ம் திகதி of America nursery school, Fomto nursery school, BEP nursery school ஆகிய பாலர் பாடசாலைக்கான களவிஜயமும் மேற் கொள்ளப்பட்டது.

Untitled-4 copy
Untitled-5