Category Archives: Latest Updates

தேசிய மொழிகள் திட்டத்தின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

Untitled-3 copy
தேசிய மொழிகள் திட்டத்தின் பிரகாரம் SOND அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட சமூக அமைப்புக்களின், அரசசார்பற்ற சமூக அமைப்புக்களின் பொருளாதார முயற்சிகளினை கற்றறியும் நோக்குடன் 13.9.2014 சனிக்கிழமை வருகை தந்திருந்தனர். விஜயத்தின் முதல் நாள் 13.09.2014 அன்று யாழ் அரசசார்பற்ற இணையத்திற்கும், புங்குடுதீவு சர்வோதயத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டு தமது அனுபவங்களை 

டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையில் SOND அமைப்பினால்அனகி அடுப்பு வழங்கப்பட்டது

Untitled-1 copy
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையில் SOND அமைப்பினால் ஆரயம்பதி சக்தி தாய்மார் சங்கத்தின் 40 உறுப்பினர்களுக்கு 19.09.2014. ம் திகதி அனகி அடுப்பு வழங்கப்பட்டது 

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆக்கச் செயற்பாடு தொடர்பான பயிற்சிப்பட்டறை

Untitled-1 copy
கழிவுப் பொருட்களை பயன்படுத்தி ஆக்கச் செயற்பாடு தொடர்பாக ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சிப்பட்டறை 2014.09.21 ம் திகதி அன்று தம்பட்டை சுவாட் அமைப்பின் பயிற்சி கட்டடத்தில் நடைபெற்றது.
இலண்டண் சிவாசரிற்றி அமைப்பின் நிதியூட்டலுடன் அக்கரைப்பற்று சொன்ட் அமைப்பு முன்னெடுத்த வேலைத் திட்டமானது அமைப்பின் உத்தியோகத்தர் த..விஜயகுமார் தலைமையில் ஆரம்பமானது.

மாதாந்த ஆய்வரங்கு -அதிகரித்துவரும் வீதி விபத்துக்களும், வீதிப்போக்குவரத்துச் சட்டங்களும்.

1 copy
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் இயங்கிவரும் சொண்ட் நிறுவனமானது சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனோடு தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களினுடைய ஒத்துழைப்புடன் அதற்குரிய விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு வழங்கிவருகின்றது. அந்தவகையில்; ‘அதிகரித்துவரும் வீதி விபத்துக்களும், வீதிப்போக்குவரத்துச் சட்டங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வரங்கானது நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் 06/09/2014 (சனிக் கிழமை), காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.  
 

இளையோர்களுக்கான மொழிகள், உரிமைகள் மொழிச் சட்டப்பயிற்சி

10152020_579392395516564_4503911905952221589_n

மொழிகள் திட்டத்தின் அனுசரையில் சொண்ட் அமைப்பினால் இளையோர்களுக்கான மொழிகள், உரிமைகள் மொழிச் சட்டப்பயிற்சி 2014.08.30 ல் அக்கரைப்பற்று,  யாழ்ப்பாணம்  சொண்ட்  பயிற்சி நிலையத்தில்  நடாத்தப்பட்டது.  அக்கரைப்பற்றில்  வளவாளர் சட்டத்தரணி றசீட்  அவர்களும்  யாழில்   மு.ரெமடியஸ்  அவர்களும்   வளதாரியாக  பங்கு  கொண்டனர். இப் பயிற்சியில் அக்கரைப்பற்றில்  9  தமிழ் 15 முஸ்லீம்

இயற்கை முறையிலான விவசாயம்-தங்கவேலாயுதபுரத்தில் சொண்ட் அமைப்பினால்

7
இயற்கை முறையிலான விவசாயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தலினை நோக்காகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் சொண்ட் அமைப்பினால் 11 ஏக்கர் விவசாயப் பண்ணையானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இப் பண்ணையில் தென்னை, வாழை மரக்கறி பழ மரக்கன்றுகள் நடுகை பண்ணப்பட்டு மக்களிற்கு விற்பனைக்காக வழங்கப்படுகின்றது.

காந்தி சிறுவர்கழக சிறுவர்களால் தயாரிக்கப்பட்ட 1248 குழுசைப் பைகள்

5
எமது அமைப்பின் கீழ் செயற்படும் காந்தி சிறுவர்கழக சிறுவர்களால் தயாரிக்கப்பட்ட 1248 குழுசைப் பைகள் 2014.08.19ல் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது

Anaki cook stoves provided as model.

1
50 Anaki cook stoves have been provided by SOND with the support of Diakonia to the members of RRF society in Thevukkalai village in Alayadevembu DS Division in Ampara District under the climate change activity where, the members have gained the knowledge about how this activity is contributing to positive climate change and also they have valued its economical support to the household.

சேதனசான்றிதழ்(Organic Certificate) வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

U.copy
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக சேதனை முறையில் வாழை செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு சேதனசான்றிதழ்(Organic Certificate) வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் போது ஆலோசகர் அஜந்தா.பகீர் அவர்கள் உரையாடுவதையும், வாழை செய்கையில் ஈடுபடுவோரையும் காண்பீர்கள்.

யாழ் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Untitled-5 copy
யாழ் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எமது SOND அலுவலகத்தில் நடந்த போது பேராசிரியர். சினத்தம்பி, முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனதாஸ் மற்றும் கல்விமான்கள், சமூக சேவலர்கள்  கலந்து கொண்டனர்.