Category Archives: Latest Updates

தேசிய சமாதான பேரவை

 

WhatsApp+Image+2021-06-22+at+21.59.14

தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் கடந்த பங்குனி மாதம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தினசரி ஜனநாயகத்தை பேணுதல் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்வுகளை படத்தில்  காணலாம்.

 

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

 

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி அண்மையில் கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்கள் இப் பயிற்சியை ஆரம்பித்து உரையாற்றினார், மேலும் திட்டத்தை அமுலாக்கும் சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா உரையாற்றினார், மேலும் திட்ட வழிகாட்டல் நிதி உதவியளித்த யுனிசெவ் நிறுவன வடபிராந்திய தலமை அதிகாரி திரு.ந.சுதர்மன் அவர்கள் பயிற்சியை ஆரம்பித்து நடாத்தினார். தொடர்ந்து இரண்டு நாட்களும் மூன்று பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தின் Gate Keepers ற்கான பயிற்சி – யாழ் மாவட்டம்

 

gate keepers jaff

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தின் Gate Keepers ற்கான பயிற்சி யாழ் வலயக்கல்விப் பணிமனை மண்டபத்தில் கல்வித் திணைக்கள அதிகாரிகள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு நடைபெற்றது. இதன் போது இத் திட்டத்தை அமுலாக்கும் சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா திட்டம் தொடர்பான அறிமுக உரையாற்றினார், தொடர்ந்து உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி.வேளினி அவர்கள் இத் திட்டத்தில் கல்வி திணைக்களத்தின் பங்கு பற்றி விளக்கமளித்தார், மேலும் யுனிசெவ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி திருமதி.சர்மிலி திட்டம் தொடர்பான விளக்கமளித்ததுடன் பயிற்சியை தொடர்ந்து நடாத்தினார்.

SCOUT செயற்திட்டத்தினூடாக சாவகச்சேரி பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி

 

chava CBO

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற் திட்டத்தினூடாக சாவகச்சேரி பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் செல்வி.R.தாட்சாயினி அவர்களும் கலந்துகொண்டனர்.

 

 

வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் – கிளிநொச்சி மாவட்டம்

 

Kili Kach

கியிநொச்சி மாவட்ட செயலகத்தில் UNICEF நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தால் அமுலாக்கப்பட உள்ள வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட அரச அதிபர் அவர்கள் உரையாற்றினார், தொடர்ந்து SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றினார்.

யுனிசெவ் வடபிராந்திய அதிகாரியும், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரும் தொடர்ந்து இத் திட்டம் தொடர்பான விளக்கத்தினை வளங்கினார்கள்.

வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் – யாழ் மாவட்டம்

 

PATH orientation 1

யாழ் மாவட்ட செயலகத்தில் UNICEF நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தால் அமுலாக்கப்பட உள்ள  வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம்  நடைபெற்றபோது மாவட்ட அரச அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் உரையாற்றினார்,

தொடர்ந்து SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள்  உரையாற்றினார்.

 

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் இரண்டாவது திட்ட மீளாய்வு கூட்டம்

 

IOM foram 1

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் இரண்டாவது திட்ட மீளாய்வு கூட்டம்  யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தினை அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

SCOUT செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி

 

iom sandilipay cbo trai

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது சண்டிலிப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் திருமதி.S.டினேசியா அவர்களும் கலந்துகொண்டனர்

 

 

 

அம்பாறை மாவட்ட தமிழ்பிரதேச செயலக பிரிவிலுள்ள இணக்கசபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல்.

 

SWaOD

SWOAD நிறுவன ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலக பிரிவிலுள்ள இணக்கசபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலொன்று 30.11.2019 அன்று அக்கரைப்பற்று SWOAD மண்டபத்தில் நடைபெற்றது.

 

 

யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான மனித விற்பனை தொடர்பான கலந்துரையாடல்.

 

iom jaffna Ds

பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு பிரதிநிதிகளும் SOND அமைப்பின் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் இணைந்து மாவட்டத்தின் மனித விற்பனை தொடர்பான நிலை பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் நடாத்தினார்கள்.