Category Archives: Latest Updates
செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த மிதிவெடி அபாயக்கல்வி, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் சுகாதாரமும் போசாக்கும் ஆகிய செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர் வன்முறை சார் முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சம்பவ முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறை சார் முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சம்பவ முகாமைத்துவம் தொடர்பான 2 நாள் பயிற்சிநெறி வழங்கப்பட்டது….
சிறுவர்கழகங்களுக்கான ஆளுமைவிருத்திக்கான தொடர் பயிற்சிகள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர்கழகங்களுக்கான ஆளுமைவிருத்திக்கான தொடர் பயிற்சி நெறிகள் பின்வரும் தலைப்புகளில் நடைபெற்றுவருகின்றன.
1. தலைமைத்துவம்
2. ஒழுக்க விழுமியங்கள்
3. வன்முறை அற்ற தொடர்பாடல்
4. எதிர்காலத் திட்டமிடலும் இலக்குகளை அடைதலும்
5. கனவுகளை உருவாக்குதல்
6. உணர்வுகளை வெளிப்படுத்தலும் நெறிப்படுத்தலும்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பொது மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக எமது களப்பணிக் கிராமங்கள் 10இலும் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றதற்கான பதிவுகள்……………..
அரசாங்க உத்தியோத்தர்களுக்கான முதலுதவிப் பயிற்சியும், மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகம், நல்லூர் பிரதேச சபை, மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதலுதவிப் பயிற்சியும், மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் பொருத்தப்பட்டன.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 15 பாடசாலைகளுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவப் பொருட்கள் வழங்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும