Category Archives: Latest Updates
மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான கூட்டம்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் நாவற்குழி கிராம மக்களுக்கான சமூக முரண்பாடுகளையும், சமூக விரோத செயற்பாடுகளில் மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றதை படங்களில் காணலாம்…
செயலமர்வு
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் , சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் திட்டத்தின் கீழ் , இளையோர்களுக்கான வன்முறையற்ற தொடர்பாலும் , வெறுக்கத்தக்க பேச்சும் , மற்றும் தீவிரமான வன்முறைகளைத் தவிர்த்தலும் தொடர்பான செயலமர்வு. திங்கட் கிழமை யாழிலுள்ள சுபாஸ் ஹோட்டலில் நடைபெற்றது . இந்தப் பயிற்சி நெறியில் யாழ்ப்பாணம் , வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 38 இளைஞர் , யுவதிகள் பங்குபற்றினர் . ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் , இளைஞர் , யுவதிகளுக்கு குறித்த இந்தப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது .
கீழ் புதிய ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி
தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான இரண்டாவது பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான இரண்டாவது பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடாத்தப்பட்டது. நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.
தகவல் அறியும் உரிமை (RTI) சம்பந்தமான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தின் பங்குதாரர்களுக்கான தகவல் அறியும் உரிமை (RTI) சம்பந்தமான பயிற்சி ஒன்று SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நடாத்தப்பட்டது. நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தன் பேராசிரியர் மோகனதாஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் வடமராட்சி வலய மருதங்கேணிக் கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா sir அவர்களும், ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.
கூட்டம்
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவை செயற்படுத்துவது சம்பந்தமான கூட்டம் உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் இக்குழுவை செயற்படுத்துவது சம்பந்தமான விளக்கமளித்தார்.
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பயிற்சி
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகர சபையின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும், சமூகத் தலைவர்கள், இளையோர், ஆர்வலர்களுக்கும் CDRI நிறுவன உதவியுடன் #SOND நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி தை 29, 30 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
மாதாந்த கலந்துரையாடல்
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல் 02.02.2022 அன்று நடைபெற்றதை படங்களில் காணலாம்..
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் தென்மராட்சி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 28.01.2022 நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா sir அவர்களும், ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.