Category Archives: Latest Updates

அரசாங்க அதிகாரிகளுக்கான சட்ட ஆட்சி தொடர்பான ஒரு நாள் பயிற்சி – தெல்லிப்பளை பிரதேச செயலகம்

 

ds  npc 2

அண்மையில் அரசாங்க அதிகாரிகளுக்கான சட்ட ஆட்சி தொடர்பான ஒரு நாள் பயிற்சி தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சியில் வளவாளராக சட்டத்தரணி திரு.ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலக உதவி தட்டமிடல் பணிப்பாளர் திரு.வி.சிவகுமார் அவர்களும்,SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும், சொண்ட் நிறுவன பணியாளர்களும், NPC நிறுவனத்தின் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திருமதி.வி.முகுந்தினி அவர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சமூக ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி

 

ps npc 3

அண்மையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சமூக ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி தெல்லிப்பளை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சியில் வளவாளராக திரு.வீரசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.சோ.சுகிர்தன் அவர்களும், SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும், NPC நிறுவனத்தின் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திருமதி.வி.முகுந்தினி அவர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்

 

san 4

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி.U.யசோதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – சாவகச்சேரி பிரதேச செயலகம்

 

cha 1

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் திருமதி.க.வினோஜிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

சமூக மதிப்பீட்டிற்கான ஒரு நாள் பயிற்சி – பலாலி வடக்கு

 

palaly 1

NPC நிறுவனத்தின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் SCORE திட்டத்தின் கிழ் இலகுபடுத்துனர்களாக பயிற்றுவிக்கப்பட்ட இலகுபடுத்துனர்களால் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமங்களில் ஒன்றான பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவில் சமூக மதிப்பீட்டிற்கான ஒரு நாள் பயிற்சி நடாத்தப்பட்டது. இதில் SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும், SOND நிறுவன ஊழியர்களும், NPC நிறுவனத்தின் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திருமதி.முகுந்தினி அவர்களும் இப்பயிற்சியை இணைந்து நடாத்தினர்.

சமூக மதிப்பீட்டு பயிற்சி – SCORE திட்டம்

 

NPC 2

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப் பட்டுவரும் SCORE திட்டத்தின் கீழ் இலகுபடுத்துனர்களாக பயிற்றுவிக்கப்பட்ட இலகுபடுத்துனர்களால் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம  சேவகர் பிரிவுகளில்  சமூக மதிப்பீட்டிற்கான இரண்டு நாள் பயிற்சிகள் வீதம்  நடாத்தப்பட்டது.

SCOUT பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி

 

TOT 7

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் என்னும் செயற்திட்டத்தில் SCOUT பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி அண்மையில் யாழ்ப்பாணம் ஜெற்வின் ஹொட்டலில் நடைபெற்றபோது பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.செல்வராணி நிக்களஸ்பிள்ளை அவர்களும், IOM நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பி.டொன் மினோலி அவர்களும் உரையாற்றினார்கள்.

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – கோப்பாய் பிரதேச செயலகம்

 

Kop 4

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி.எம்.சுபாஜினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – தெல்லிப்பளை பிரதேச செயலகம்

 

tel3

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்

 

J3

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலர் திருமதி. சோபிகா றோய் றொபின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள், கலந்துகொண்டனர்.