Category Archives: Latest Updates
டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் அனகி அடுப்புவழங்கபட்டது.
இயற்கை விவசாயப் பண்ணை
இப்படி ஒரு பண்ணை கடந்த வருடம் நீர்வேலியில் 4 பரப்புக் காணியில் SOND நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இப்பண்ணையில் வாழை, வாழைக்கிடையே கிளிசரியா வேலிகள் ஊடுபயிராகப் போடப்பட்டது. அத்தோடு பப்பாசி, அன்னாசி, மரக்கறிப்பயிர்வகைகள், அபூர்வமான மூலிகைகள் என்பன நாட்டப்பட்டன. மலைநாட்டில் விளையும் சலாது போன்ற மரக்கறி வகைகளும் நாட்டப்பட்டன. இப்பண்ணையில் மிகக்குறைந்தளவு நீர் பயன்படுத்தப்பட்டது. அயலில் இருக்கின்ற வாழைத்தோட்டங்களிற்கு பாய்ச்சுகின்ற நீரின் கால்ப்பங்கு நீரே இப்பண்ணையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பண்ணை மிகவும் செழிப்பாகக் காணப்பட்டது. இப்பண்ணையைப் பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், ஆர்வலர்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இப்பண்ணை கடந்த வருடம் வடமாகாண விவசாய அமைச்சர் திரு.ஐங்கரநேசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லப்பைப் பண்ணை
தற்போது புதிய பண்ணையொன்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்லப்பை என்ற இடத்தில் வல்லிபுரக் கோவிலுக்கு மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை சுமார் 10 ஏக்கர் நிலத்தைக் கொண்டது.
இதில் 6 ஏக்கர் நிலம் நெற்காணியும் 4 ஏக்கர் நிலம் மேட்டுக்காணியும் உள்ளது. இங்கு 20 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயமுறையைப்பற்றி விவசாயச்செய்கை ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
இளையோர் திருவிழா
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளினதும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளினதும் கலாசார திருவிழா 11.10.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி வீதியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் பல்வகை கலாச்சார நிகழ்ச்சிகளும் இளைஞர் யுவதிகளினது ஆக்கத்திறன் வெளிப்பாடும் இடம்பெறும். மொழிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமாதான சகவாழ்வு என்ற கருப்பொருளிலான சித்திரப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறும்.
காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வு
சொண்ட் அமைப்பினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வானது செப்டம்பர் 29 காலை 10 மணிக்கு இவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச. செந்தூராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதில் பல்வேறு அரசதிணைக்களங்களிலிருந்தும், அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும் கமநல அமைப்புக்களிலிருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.