Category Archives: Latest Updates
பயிற்சிநெறி
எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சி
அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சிப்பட்டறையானது தேசிய சமாதானப் பேரவையின் அனசரணையுடன் #NPC , சொண்ட் நிறுவனத்தினால் #SOND நேற்றைய தினம் #Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…..
கலந்துரையாடல்
சீன பட்டதாரியான Ruiyao அவர்கள் Honkhong web சார்பாக புலம்பெயர் தொழிலாளர் ஆய்வினை மேற்கொள்ள எமது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணியாளர் திரு.ச.செந்துராசா அவர்களை அண்மையில் சந்தித்தனர்.
திட்ட மீளாய்வு கூட்டம்
மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 16.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.











