Category Archives: Latest Updates

குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பயிற்சி நெறி

 

HN 1

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சுகாதாரமும் போசாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பயிற்சி நெறி வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் 2 நாட்கள் நடைபெற்றது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா யா/வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றது.

01

 

சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium)

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் நிறுவனத்தினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium) அண்மையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச.சிவசிறீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

00001

 

சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள்(Bill board) காட்சிப்படுத்தல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு செயற் திட்டத்தினூடாக தெல்லிப்பளை பிரதேசத்தில் எமது செயற் திட்ட கிராமங்களில் உள்ள 9 பாடசாலைகளில் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் (Bill board)  அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டன.

9

 

கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கல்

 

தெல்லிப்பளை சுகாதாரப்பணிமனையின் கீழ் பணியாற்றும் 10 கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கு BAG மற்றும் குடைகள், அவர்களுக்கான சீருடை என்பன SOND நிறுவனத்தினரால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

15

 

UNICEF அமைப்பின் வதிவிட பிரதிநிதியினதும் நேபாள அலுவலக பிராந்திய பொறுப்பாளரினதும் கள விஜயம்

 

UNICEF அமைப்பின் வதிவிட பிரதிநிதியும், நேபாள அலுவலக பிராந்திய பொறுப்பாளரும், கிளிநொச்சி UNICEF அலுவலக பணியாளர்களும் SOND நிறுவன களநிலை செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக சமூகம் தந்திருந்தனர். இதன் போது பலாலி கிழக்கில் VCDC குழுவினரையும், எமது களப்பணியாளர்களையும் சந்தித்ததோடு பளைவீமன்காமம் தெற்குப்பகுதியில் தாய்மார் கழக உறுப்பினர்களையும், சிறுவர்கழக உறுப்பினர்களையும் சந்தித்தனர். இச் சந்திப்பின்போது நேபாளம் சென்றிருந்த செல்வி இ.மதிஸ்ராவிற்கு சான்றிதழ் வழங்கினர்.

11

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் வருகை

 

தெல்லிப்பளை மீள் குடியேற்ற பிரதேசமான மயிலிட்டி வடக்கிற்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வருகை தந்து அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பொது மக்களுடன் மீய்குடியேற்றப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் ஐ.நா அமைப்பு இதற்கான உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமெனத் தெரிவித்தார்.

5

 

விழிப்புணர்வுத் தெருநாடகங்களைக் காட்சிப்படுத்தல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் மிதிவெடி அபாயக் கல்வி எனும் செயற்திட்டத்தின் கீழ் மிதிவெடி அபாயம், வீதி பாதுகாப்பு, சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரமும் போசாக்கும் எனும் கருப்பொருட்களை உள்ளடக்கி 40 நிமிடம் கொண்ட தெருநாடகம் ஒன்றை SOND நிறுவனத்தால் மீள்குடியேற்றப் பிரதேசத்தில் நடாத்தி வருகின்றோம்.

12

 

கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கான (VCDC) உதவி வழங்கல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு எனும் செயற்திட்ட பிரிவின் கீழ் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் (VCDC) இயங்குவதற்கு தேவையான பொருட்கள் 10 கிராம சேவகர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.

02

 

சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் எனும் செயற்திட்ட பிரிவின் கீழ்  கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

04