Category Archives: Latest Updates
UNICEF அமைப்பின் வதிவிட பிரதிநிதியினதும் நேபாள அலுவலக பிராந்திய பொறுப்பாளரினதும் கள விஜயம்
UNICEF அமைப்பின் வதிவிட பிரதிநிதியும், நேபாள அலுவலக பிராந்திய பொறுப்பாளரும், கிளிநொச்சி UNICEF அலுவலக பணியாளர்களும் SOND நிறுவன களநிலை செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக சமூகம் தந்திருந்தனர். இதன் போது பலாலி கிழக்கில் VCDC குழுவினரையும், எமது களப்பணியாளர்களையும் சந்தித்ததோடு பளைவீமன்காமம் தெற்குப்பகுதியில் தாய்மார் கழக உறுப்பினர்களையும், சிறுவர்கழக உறுப்பினர்களையும் சந்தித்தனர். இச் சந்திப்பின்போது நேபாளம் சென்றிருந்த செல்வி இ.மதிஸ்ராவிற்கு சான்றிதழ் வழங்கினர்.
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் வருகை
தெல்லிப்பளை மீள் குடியேற்ற பிரதேசமான மயிலிட்டி வடக்கிற்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வருகை தந்து அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பொது மக்களுடன் மீய்குடியேற்றப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் ஐ.நா அமைப்பு இதற்கான உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமெனத் தெரிவித்தார்.
விழிப்புணர்வுத் தெருநாடகங்களைக் காட்சிப்படுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் மிதிவெடி அபாயக் கல்வி எனும் செயற்திட்டத்தின் கீழ் மிதிவெடி அபாயம், வீதி பாதுகாப்பு, சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரமும் போசாக்கும் எனும் கருப்பொருட்களை உள்ளடக்கி 40 நிமிடம் கொண்ட தெருநாடகம் ஒன்றை SOND நிறுவனத்தால் மீள்குடியேற்றப் பிரதேசத்தில் நடாத்தி வருகின்றோம்.
கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கான (VCDC) உதவி வழங்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு எனும் செயற்திட்ட பிரிவின் கீழ் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் (VCDC) இயங்குவதற்கு தேவையான பொருட்கள் 10 கிராம சேவகர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.
சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல்
சொண்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தின் அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம்
சொண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றபோது சொண்ட் நிறுவனபணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றுவதையும் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.மா.வேதநாயகன் அவர்கள் உரையாற்றுவதையும் கூட்டத்தில் கலந்துகொண்ட அரச பணியாளர்களையும் சொணட் நிறுவன பணியாளர்களையும் காணலாம்.
UNICEF Child protection team visited to Varuthalaivilan to meet female children.
Unicef asked us to meet and discuss with teen age girls. We SOND MRE team made the arrangement for the meeting and we have selected Varuthalaivilan GN division.
Ms.Songha Child protection KMCO (Colombo) and Mr.Suthan Child protection officer (Kilinochi) came and met the teenage girls on December 13th, 2017.
They had discussion with them. They discussed about their schooling, mensuration, what they are doing in the children club meeting, if they are stressful to whom they will speak regarding their problems.
மாவிட்டபுரம் தெற்குப் பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு
இன்றைய தினம் 09.12.2017 தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியான மாவிட்டபுரம் தெற்குபகுதியில் (J/232) பாவனையற்ற மலசலகூட குழியினை புனரமைப்பதற்காக அகழ்கையில் அக்குழியில் சில வெடி பொருட்கள் காணப்பட்டமையால் அங்கு துப்பரவுப்பணியில் ஈடுபட்டவர்கள்
சொண்ட் நிறுவனத்திற்கு அறிவித்தல் வழங்கியதற்கமைய Halo-trust பணியாளர்கள் அப்பிரதேசத்திற்கு விரைந்து வந்து வெடிபொருட்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொழுது 90 வெடிக்காத நிலையிலுள்ள வெடி பொருட்கள் அகற்றப்பட்டன.
A group discussion about child protection issues conducted by UNICEF Childprotection team in Vajavilan east
The group discussion conducted on 28th November, 2017 in the community center. Mr.Ramiz (Child protection manager UNICEF) , Mr.Suthan (Child protection officer UNICEF, Kilinochi), SOND staff, Garama servaka officer, development officer, WRDS and, RDS members, preschool teacher and the people have been participated.
They mainly worried about dropout and irregular schooling. They inform that most of the people are labor workers generation by generation and wanted to educate their children.