Category Archives: Latest Updates
ஆன்மீக சொற்பொழிவு
சமூதத்தினர் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் சமூகப்பாதிப்புகளும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளும் ஆலோசனைகளும் என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல்

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்காலத்தில் எமது சமூதத்தினர் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் சமூகப்பாதிப்புகளும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளும் ஆலோசனைகளும் என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் 14.12.2011 புதன் கிழமை மு.ப 10.00 மணிதொடக்கம் பி.ப 12.00 மணிவரை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
UNICEF பிரதிநிதி திரு.செபஸ்ரியன் அவர்களின் யாழ் விஜயம்
ஆன்மீக சொற்பொழிவு இறுவெட்டு வழங்கும் நிகழ்வு

நல்லூர்கந்தன் உற்சவகாலத்தில் ஆண்மீக சொற்பொழிவு ஆற்றிய சொற்பொழிவாழர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இறுவட்டு வழங்கும் நிகழ்வும் 19.11.2011 (சனிக்கிழமை) அலுவலகத்தில் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
TOT – பயிற்சி வழங்குனர் களுக்கான பயிற்சி

அரசு சாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் சமூகமட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் நோக்குடன் சமூக செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி SOND அலுவலகத்தில் 03.11.2011 அன்று நடைபெற்றது. நிறைவேற்றுப்பணிப்பாளர் இப் பயிற்சிக்கான வளதாரியாக செயற்பட்டிருந்தார். இதில் SOND ஊழியர்கள் அடங்கலாக 39 பேர் கலந்துகொண்டனார்.
மாவட்ட பொது ஒருங்கிணைப்பு குழு தொடக்கநிகழ்வு

SOND நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அரசு சாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் பொதுசனசமூக அமைப்புக்களின் அபிவிருத்திக்கான மாவட்ட பொது ஒருங்கிணைப்பு குழு தொடக்கநிகழ்வு 20.08.2011 அன்று யாழ் SONDஅலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பிரதேச மட்ட மக்கள் மன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கோப்பாய் பிரதேச விவசாயக் குழுக்களுக்கு மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு.

SOND நிறுவனத்தினால் கோப்பாய் பிரதேச விவசாயக் குழுக்களுக்கு மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு. 05.08.2011 அன்று SOND நிறுவனத்திட்ட உத்தியோகத்தர் திரு க.செந்தூரன் அவர்களின் தலமையில், சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கிராமசேவகர் திரு க.சிறீஸ்கந்தராசா மற்றும் விவசாயப்போதானாசிரியர்கள் செல்வி S.செல்வரஞ்சினி, திரு பாலகிருஷ்ணன் ஆகியோரால் மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
யாழ் மகளீர் உற்பத்தி விற்பனை நிலைய திறப்பு விழா – 14.07.2011

யாழ்மாவட்ட மகளீர் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும் அவர்களின் வாழ்கைத்தரத்தை முன்னேற்றும் நோக்குடனும், எமது நிறுவன அனுசரனையுடன் யாழ் மகளீர் உற்பத்தி விற்பனை நிலையம் வியாளக்கிழமை (14.07.2011) காலை 10 மணிக்கு இல18 சீனியர் வீதி, கலட்டி யாழ்பாணம் எனும் முகவரியில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தவமணி ஜெயறாயன் அவர்களால்திறந்துவைக்கப்பட்டது.