Category Archives: Latest Updates

மனித விற்பனை (Human trafficking) நிலை பற்றிய கலந்துரையாடல்.

 

iom 1

IOM விசேட நிபுணத்துவ ஆலோசகர் திரு.ஜொனதன் மாற்ரன்ஸ் யாழ் மாவட்டத்தின் சில அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளை சந்தித்து மனித விற்பனை (Human trafficking) நிலை பற்றி கலந்துரையாடினார்.
SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் இதில் கலந்து கொண்டு மாவட்ட நிலைபற்றி எடுத்துரைத்தார்.

 

 

அம்பாறை மாவட்ட மத நல்லிணக்க குழுவின் எதிர்காலத் திட்டமிடல் பயிற்சி

 

SWOD

அம்பாறை மாவட்ட மத நல்லிணக்க குழுவின் எதிர்காலத் திட்டமிடல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இப் பயிற்சியில் SOND நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

 

ரெரணா நிறுவனத்தினரின் யாழ் விஜயமும் சொண்ட் நிறுவன பணிப்பாளருடன் கலந்துரையாடலும்

 

tetana meet 2

ரெரணா நிறுவனத்தினர் யாழ் மாவட்டத்தின் பல பாடசாலை சிறுவருக்கான கற்றல், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள்.

இது தொடர்பான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 27.11.2019 நடைபெற்றது.
பின்னர் இவர்கள் SOND நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.

 

 

ஐக்கிய நாடுகள் தொண்டர் அமைப்பு (UNV) கலந்துரையாடல்.

 

un vol

ஐக்கிய நாடுகள் தொண்டர் அமைப்பு (UNV)  பிரதிநிதிகள் எமது பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களை எமது அலுவலகத்தில் 26.11.2019 அன்று சந்தித்து எதிர்காலத் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இளம் தொண்டர்களை அணிதிரட்டி சமூக சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கையில் எமது நிறுவனம் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நல்லாட்சி, சட்டவாட்சி தொடர்பான பயற்சி

 

2

தேசிய சமாதானப் பேரவையின் SCORE திட்டத்தின் கீழ் SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நல்லாட்சி, சட்டவாட்சி தொடர்பான பயற்சி  நடைபெற்றது.

இப் பயிற்சியில் வளவாளராக சட்டத்தரணி திருமதி.ச.கார்த்திகா தேவி கலந்துகொண்டார்.

உப தவிசாளர் பொன்னம்பலம் இராசேந்திரம் அவர்கள் பயிற்சியின் தொடக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் திட்ட மீளாய்வு கூட்டம்

 

21

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் திட்ட மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தினை மேலதிக அரசாங்க அதிபர் திரு.முரளிதரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

 

SCOUT செயற்திட்டத்தினூடாக யாழ்ப்பாணப் பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி

 

11

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற் திட்டத்தினூடாக யாழ்ப்பாணப் பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது யாழ் கலைத்தூது கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.S.றஜினி அவர்களும் கலந்துகொண்டனர்.

SCOUT செயற்திட்டத்தினூடாக கோப்பாய் பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

 

2

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற் திட்டத்தினூடாக கோப்பாய் பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் செல்வி.R.தாட்சாயினி அவர்களும் கலந்துகொண்டனர்.

சர்வதேச சமாதான தின நிகழ்வு – 2019

 

2

இலங்கை தேசிய சமாதானப் பேரவையால் முன்னெடுக்கப்படும் SCORE திட்டமானது வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவில் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வதேச சமாதான தினமும், மாவட்டங்களுக்கிடையிலான பரிமாற்ற வேலைத்திட்ட நிகழ்வும் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

SCOUT செயற்திட்டத்தினூடாக தெல்லிப்பளை பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

 

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக தெல்லிப்பளை பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் செல்வி.R.தாட்சாயினி அவர்களும் கலந்துகொண்டனர்