Category Archives: Latest Updates

மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு

 

MRE 1 27 10 15 copy

யாழ் SOND அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு ஒன்று அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு பலாலி தெற்கு கிராமஉத்தியோகத்தர் பிரிவில் 26.10.2015 அன்று நடைபெற்றது. இதில் மீள்குடியேறிய 60 ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மிதிவெடி விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டார்கள்.

காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு

 soak di 5 12 10 2015
டயக்கோணியா நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND அமைப்பினுடைய அமுலாக்கத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு 06.10.2015 ல் தம்பட்டை மகாவித்தியாலத்தில் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், SOND பணியாளரால் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் S.தர்மபாலன் (வலையக்கல்வி அலுவலகம் திருக்கோவில்) T .மேகராஜா(சுற்றாடல் உத்தியோகத்தர்) தம்பட்டை மத்திய மகாவித்தியாலய அதிபர் M.சிவானந்த, ஆசிரியர் K.கோகுலதாசன்,

சர்வதேச சிக்கன சேமிப்பு தின நிகழ்வு:

 soma nsa 6 10 2015 1
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிஅனுசரனையுடன் SOND, ZOA மற்றும் YGRO ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து அமுல்படுத்திவரும் “வாழ்வாதாரத் தடைகளை இனங்கண்டு சமூகப் பொருளாதார அபிவிருத்தியினூடாக சமூகமட்ட அமைப்புக்களின் திறனை மேம்படுத்தல்”எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமான பொதுநிகழ்வுகளைக் கொண்டாடுதல் எனும் செயற்பாட்டின் கீழ் சர்வதேச சிக்கன சேமிப்பு தினமானது SOND அமைப்பினால் ZOA மற்றும் ஏனைய பங்குதார நிறுவனங்களின்

வேலை வாய்ப்பு

திட்ட உத்தியோகத்தர் (Project Officer) கள உத்தியோகத்தர் (Field Officer) பதவி வெற்றிடங்கள் உள்ளது.  3 வருட NGO பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சுய விபரக்கோவையை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

SOND 435/9A கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
Mobile no : 077 224 2394

பாடசாலைகளுக்கான பழமரக்கன்றுகள் வழங்கல்

 

sojftrpl 25 9 2015 1

SOND நிறுவனத்தினால் தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவிலுள்ள யா/குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் வித்தியாலயத்திற்கு 75 பழமரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

படத்தில் அதிபர் மரக்கன்றுகளை பாடசாலை வளாகத்தில் நாட்டுவதையும் அருகில் ஆசிரியர்கள் மாணவர்கள் நிறுவனத் தலைவர் ஆகியோரையும் காணலாம்.

இயற்கை முறையிலான விவசாயச் செய்கை வலுவூட்டல் பயிற்சி -தங்கவேலாயுதபுர விவசாயப்பண்ணையில்

 

soakp farm web  24 9 15 2

டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையுடன் SOND அமைப்பினுடைய அமுலாக்கத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் எமது அமைப்பின் கீழ் செயற்படும் பெண்கள், விவசாய சங்கங்களினுடைய உறுப்பினர்களுக்கான இயற்கை முறையிலான விவசாயச் செய்கை வலுவூட்டல் பயிற்சி தங்கவேலாயுதபுர விவசாயப்பண்ணையில் இலகுபடுத்துனர் திரு வீ.வேலாயூதம் அவர்களால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் மூலிகைப் பூச்சி விரட்டி, பழ ஊக்கக்கரைசல், 

கிராம அபிவிருத்தி செயற்திட்டம்

soma nsa 9 2015

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகர் பிரிவில் ஈச்சளவக்கை கிராமத்தில் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 07.09.2015 நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பல்வேறு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்





சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

MRE PM copy

தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மீள்குடியேற்றப்பட்ட கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 சிறுவர் கழகங்களுக்கு கரப்பந்து, கால்ப்பந்து, துடுப்பாட்ட உபகரணங்கள் (Volley ball, Foot ball, Cricket ball, bat, stumps, Badminton, Chess Board, Carom board) போன்ற விளையாட்டு உபகரணங்கள் அந்தந்ந பிரதேசத்தில் உள்ள CRPO இன் அனுசரனையுடன் வழங்கப்பட்டது.

மிதிவெடியினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவி

MRE lh 28 8 15
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் மிதிவெடி மற்றும் வெடிபொருட்களினால் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
இதன்படி தெல்லிப்பளை, உடுவில், சாவகச்சேரி பிரதேச சபை செயலக பிரிவுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் கிராமசேவகர் அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்டு சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலர் அனுமதியுடன் ரூபா முப்பதாயிரம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு- சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளோம்

 

wh1   நல்லூர் திருவிழாவை முன்னிட்டு எமது SOND அமைப்பினால் எம்மிடம் உள்ள எமது செயற்திட்டத்துடன் தொடர்பான பதாதைகள், சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகள் மற்றும் சமயம் சார்ந்த நன்நெறியினை வெளிப்படுத்தும் பதாதைகளை நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பெருந் தெருக்களில் காட்சிப்படுத்துகின்றோம். இச்செயற்பாட்டிற்கு வர்த்தக சங்கத்தின் உதவியுடன் 15 வணிக நிறுவனங்கள் 15 பதாதைகளை வடிவமைப்பதில் நிதிப்பங்களிப்பு செய்துள்ளனர். பதாதைகளைக் கீழே காணலாம்.