Category Archives: Latest Updates
இயற்கை முறையிலான விவசாயச் செய்கை வலுவூட்டல் பயிற்சி -தங்கவேலாயுதபுர விவசாயப்பண்ணையில்
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையுடன் SOND அமைப்பினுடைய அமுலாக்கத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் எமது அமைப்பின் கீழ் செயற்படும் பெண்கள், விவசாய சங்கங்களினுடைய உறுப்பினர்களுக்கான இயற்கை முறையிலான விவசாயச் செய்கை வலுவூட்டல் பயிற்சி தங்கவேலாயுதபுர விவசாயப்பண்ணையில் இலகுபடுத்துனர் திரு வீ.வேலாயூதம் அவர்களால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் மூலிகைப் பூச்சி விரட்டி, பழ ஊக்கக்கரைசல்,
கிராம அபிவிருத்தி செயற்திட்டம்


மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகர் பிரிவில் ஈச்சளவக்கை கிராமத்தில் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 07.09.2015 நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பல்வேறு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்



தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மீள்குடியேற்றப்பட்ட கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 சிறுவர் கழகங்களுக்கு கரப்பந்து, கால்ப்பந்து, துடுப்பாட்ட உபகரணங்கள் (Volley ball, Foot ball, Cricket ball, bat, stumps, Badminton, Chess Board, Carom board) போன்ற விளையாட்டு உபகரணங்கள் அந்தந்ந பிரதேசத்தில் உள்ள CRPO இன் அனுசரனையுடன் வழங்கப்பட்டது.

மிதிவெடியினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவி


இதன்படி தெல்லிப்பளை, உடுவில், சாவகச்சேரி பிரதேச சபை செயலக பிரிவுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் கிராமசேவகர் அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்டு சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலர் அனுமதியுடன் ரூபா முப்பதாயிரம்
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு- சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளோம்

பல்லப்பை இயற்கை விவசாயப்பண்ணை
SOND நிறுவனமானது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தும் முகமாகவும் நஞ்சில்லா உணவை உலகிற்கு அளிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தை பரப்பு முகமாகவும் பருத்தித்துறை பல்லப்பை என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியது.
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரங்கம்
அக்கரைப்பற்று சொன்ட் நிறுவனம் ,அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் ஆகியன இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரங்கம் ஒன்றை நிறுவி அதற்கான மாதாந்த கலந்துரையாடலை நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் 07.07.2015ம் திகதி அக்கரைப்பற்று சொன்ட் அலுவலகத்தில் அம்பாறை மாவட்ட இணையத்தின் தலைவர் திரு: வ. பரமசிங்கம் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சொன்ட் அலுவலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
SDC திட்ட பிரதிநிதிகள் வருகை
SDC நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஆலோசகர்கள் மூவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் SOND அலுவலகத்தில் 03.07.2015 வெள்ளிக்கிழமை அன்று யாழ் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளருடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வந்திருந்தனர். இத்திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற திரு. பெனில் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் SOND நிறுவன பணியாளர்களுடன்
SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்றிட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது
02.07.2015 வியாழக்கிழமை கொழும்பில் Kingsbery Hotel இல் SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்திட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இவ்வாய்வில் சுவிஸ்லாந்து நாட்டு தூதுவர் அவர்களும் அமைச்சின் செயலாளர் அவர்களும் இலங்கைக்கான SDC திட்டத்தின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் 3 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். திரு.ச.செந்தூராசா அவர்களும்